Close

The Hon’ble Food and Civil Supply Minister – Oddanchatram

Publish Date : 12/02/2024
.

செ.வெ.எண்:-25/2024

நாள்:09.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி, அவர்கள் மொத்தம் ரூ.15.18 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ரூ.15.18 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று(09.02.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், நமக்குநாமே திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் நபார்டு திட்டத்தின் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அப்பியம்பட்டி ஊராட்சி வீரப்பக்கவுண்டன் வலசு பகுதியில் புதிய சமுதாயக்கூடம் கட்டடம், பருத்தியூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், அங்கன்வாடி மையம் கட்டடம், நியாயவிலைக்கடை கட்டடம், நெடுஞ்சாலை துறை மூலம் தார்சாலை அமைக்கும் பணிகள் ரூ.4.29 கோடி மதிப்பீட்டிலும், அப்பனுாத்து ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், ஓரடுக்கு மெட்டல் சாலை, புதிய சமுதாயக்கூடம் மற்றும் நெடுஞ்சாலை துறை மூலம் தார்சாலை அமைக்கும் பணிகள் ரூ.3.95 கோடி மதிப்பீட்டிலும், புங்கமுத்தூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் ரூ.18.01 இலட்சம் மதிப்பீட்டிலும், வேலம்பட்டி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல் மற்றும் சண்முகவலசு ஆதிதிராவிடர் காலனியில் புதிய சமுதாயக்கூடம் கட்டடம் ரூ.54.75 இலட்சம் மதிப்பீட்டிலும், மேட்டுப்பட்டி ஊராட்சியில் சிமெண்ட் சாலை மற்றும் வண்ணக்கல் பதித்தல் பணிகள் ரூ.39.49 இலட்சம் மதிப்பீட்டிலும், வாகரை ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், நியாயவிலைக்கடை கட்டடம், புதிய சமுதாயக் கூடம் கட்டடம் ஆகிய பணிகள் ரூ.1.41 கோடி மதிப்பீட்டிலும், பொருளுர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், அங்கன்வாடி மையம், நியாயவிலைக்கடை கட்டடம் மற்றும் பள்ளிச் சுற்றுச் சுவர் கட்டடம் கட்டுதல் ஆகிய பணிகள் ரூ.1.48 கோடி மதிப்பீட்டிலும், கொத்தயம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், நியாயவிலைக்கடை கட்டடம், பள்ளிச் சுற்று சுவர் ஆகிய பணிகள் என மொத்தம் ரூ.15.00 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு இன்று(09.02.2024) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

மேலும், நமக்குநாமே திட்டத்தில் வழக்கு ஆதிதிராவிடர் காலனியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் மற்றும் கொத்தயம் ஊராட்சியில் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் காலனியில் சமுதாயக்கூடம், ஊராட்சி மன்ற அலுவலகம், தீர்த்தாக்கவுண்டன் வலசு பகுதியில் நியாயவிலைக்கடை மற்றும் அங்கன்வாடி மையம் கட்டடங்கள், திருமலைக்கவுண்டன்வலசில் புதிய நியாயவிலைக்கடை ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஆகமொத்தம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்றையதினம் மொத்தம் ரூ.15.18 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள். கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த தமிழக மக்களை பாதுகாக்கும் வகையில் 2.30 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்பட்டது. பெண்கள் நகரப் பேருந்துகள் கட்டமில்லாமல் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள வழிவகை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய குடும்ப அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீட்டிற்கு தபாலில் குடும்ப அட்டை வந்து சேரும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆட்சிப்பொறுப்பேற்ற 32 மாதங்களில் இதுவரை சுமார் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் குடிமைப்பொருட்களை பெறுவதற்காக நீண்ட துாரம் சென்று சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் அவர்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே குடிமைப்பொருட்களை பெற்று பயன்பெறும் வகையில், புதியதாக நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது தனியார் வாடகை கட்டடங்களில் செயல்படும் புதிய நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவுகள் மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க கண்கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி, பருப்பு, எண்ணைய், சர்க்கரை போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக கலர்டாப்ளர் இயந்திரம் பொருத்தப்பட்ட 700 அரிசி ஆலைகளில் இருந்து மட்டுமே நெல் அரவை செய்யப்பட்டு, அரிசி கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைப்தற்காக 4 இலட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமிக்கும் வகையில் குடோன்கள் கட்டப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 3.50 இலட்சம் பெண்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். அதேபோல் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இன்னுயிர் காப்போம் நம்மைகாக்கும் 48 திட்டத்தில் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு சிகிச்சைக்கு ஆகும் செலவை ரூ.1.00 இலட்சம் வரை அரசு ஏற்கும் திட்டத்தில் இதுவரை 2 இலட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர்.

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றர். இத்திட்டத்தில் தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களும் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சின்னையகவுண்டன்வலசில் அறநிலையத்துறை சார்பில் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் ஒட்டன்சத்திரத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.

ஒட்டன்சத்திரம் அரசு கலை அறிவியல் கல்லுாரிக்கு கள்ளிமந்தையத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் கல்லுாரிக்கு ரூ.68.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படித்த மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெறுவதற்காக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் காளாஞ்சிப்பட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு, மத்திய மற்றும் மாநில அரசு உட்பட பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மாணவ, மாணவிகள் விடா முயற்சி, தன்னம்பிக்கை மற்றும் குறிக்கோளுடன் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

ஒட்டன்சத்திரம், பழனி சட்டமன்ற தொகுதிக்கு காவிரி நீர் ஆதாரத்தைக்கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் காவிரி குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2024-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு வரும் 2053-ஆம் ஆண்டு வரை 30 ஆண்டு காலங்களுக்கு இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. அந்த வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு, குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.300 சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.285 வரை வழங்கப்பட்டு வருகிறது. அது விரைவில் ரூ.300 ஆக உயர்த்தப்படும்.

அப்பியம்பட்டி ஊராட்சியில் மட்டும் இதுவரை ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் 80 திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேதையறும்பு மற்றும் கள்ளிமந்தையத்திலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளன.

திண்டுக்கல் உட்பட 7 மாவட்டங்களை ஒருங்கிணைத்து முருங்கை மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முருங்கை சாகுபடி விவசாயிகள் தங்களை விளைபொருட்களை பதப்படுத்த குடோன் அமைக்கப்படவுள்ளது. காவிரி மற்றும் அமராவரி ஆறுகள் இணையும் இடத்தில் மழைகாலத்தில் வீணாக கடலில் சென்று சேரும் தண்ணீரை பம்பிங் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொண்டு வருவதற்கான திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.1.00 நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி, பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் திரு.கா.பொன்ராஜ், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், துணைத் தலைவர் திரு.பி.சி.தங்கம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி கவிதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.