Close

The Hon’ble Food and Civil Supply Minister-Schemes-Keeranur

Publish Date : 11/03/2025
.

செ.வெ.எண்:-29/2025

நாள்:-08.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கீரனுார் பேரூராட்சியில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் வரத்து வாய்க்கால்கள் புனரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டி, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள், பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், கீரனுார் பேரூராட்சியில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் வரத்து வாய்க்கால்கள் புனரமைப்பு பணிக்கு இன்று(08.03.2025) அடிக்கல் நாட்டி, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள், பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்.

இந்த விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக விவசாய தொழில் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் பாலாறு பொருந்தலாறு அணையின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு மயனூர் வரத்து வாய்க்கால், கோரிக்கடவு வரத்து வாய்க்கால் மற்றும் கீரனூர் வரத்து வாய்க்கால்கள் மூலம் ஆண்டுதோறும் 120 நாட்கள் பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த 3 வரத்து வாய்க்கால்களின் சேதமடைந்த பாசன மதகுகள் மறு கட்டுமானம் செய்து வெளிப்போக்கிகள் புனரமைக்கப்பட்டு மற்றும் வாய்க்காய்கள் தூர்வாரப்படவுள்ளது. மானூர் வரத்து வாய்க்கால், கோரிக்கடவு வரத்து வாய்க்கால் மற்றும் கீரனூர் வரத்து வாய்க்கால் ஆகியவை ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மானூர் வரத்து வாய்க்கால் மூலம் 975.87 ஏக்கர் நிலங்கள், கேவரிக்கடவு வரத்து வாய்க்கால் மூலம் 453.31 ஏக்கர் நிலகங்கள், கீரனூர் வரத்து வாய்க்கால் மூலம் 886.12 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 2315.33 ஏக்கர் பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு பாசனம் மேம்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் மானூர், பாறைப்பட்டி, தும்பலப்பட்டி அங்கரைப்பட்டி, கோரிக்கடவு சிக்கல்பட்டி, மேல்கரைப்பட்டி நாச்சியப்பகவுண்டன் அம்மாபட்டி, கீரனூர், வேலூர் மற்றும் வெள்ளையகவுண்டன்வலசு ஆகிய கிராமங்களில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் வேளாண் திட்டங்களை விவசாயிகள் அறிந்து அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

விழாவில், கீரனுார் தொடக்க வேளாண்மை கூட்டறவு கடன் சங்கம் மூலம் 3 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு (37 உறுப்பினர்கள்) ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள் மற்றும் 50 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விழாவில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி சுபாஷினி, நங்காஞ்சியாறு செயற்பொறியாளர் திரு.பாலமுருகன், பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி தாகிரா மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.