Close

The Hon’ble Food and Civil Supply Minister-Schemes-Thoppampati

Publish Date : 11/03/2025
.

செ.வெ.எண்:-26/2025

நாள்:-07.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ரூ.2.21 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(07.03.2025) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரூ.2.21 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொழுமங்கொண்டான் ஊராட்சியில், கொழுமங்கொண்டான் முதல் கோவிலம்மாபட்டி சாலை ரூ.38.30 இலட்சம் மதிப்பீட்டிலும், கள்ளிமந்தையம் சாலை முதல் கொழுமங்கொண்டான் சமத்துவபுரம் சாலை வரை ரூ.57.59 இலட்சம் மதிப்பீட்டிலும், கள்ளிமந்தையம் சாலை முதல் கொழுமங்கொண்டான் கோவிலம்மாபட்டி சாலை வரை ரூ.19.14 இலட்சம் மதிப்பீட்டிலும், மானுார் ஊராட்சியல் பாறைமேடு முதல் பெரியவாய்க்கால் வழியாக செல்லும் தாளையூத்து முதல் மானுார் சாலை ரூ.34.85 இலட்சம் மதிப்பீட்டிலும், புஷ்பத்துார் ஊராட்சியில், சாமிநாதபுரம் முதல் பிரகாசபுரம் சாலை ரூ.72.62 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.2.21 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

கொழுமங்கொண்டான் ஊராட்சி பகுதியில் 201 பணிகள் ரூ.8.45 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இன்றைய தினம் 2 சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கொழுமங்கொண்டான் கோவிலம்மாபட்டி சாலை முதல் விட்டல்நாயக்கன்பட்டி சாலை வரை ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலும், மார்கண்டாபுரம் வலசக்கார தோப்பு முதல் பேச்சிநாயக்கனூர் இணைப்பு சாலை ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டிலும், கொழுமங்கொண்டான் விட்டல்நாயக்கன்பட்டி ரோடு முதல் பேச்சி நாயக்கனூர் இணைப்பு சாலை கோவில்பட்டி பிரவு தார்சாலை அமைக்க ரூ.44.00 இலட்சம் மதிப்பீட்டிலும் முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொழுமங்கொண்டான் ஊராட்சியில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. பாலாறு இடதுபுற கால்வாயிலிருந்து கோவில்பட்டி, கொழுமங்கொண்டான், கோட்டத்துரை வழியாக வாய்க்கால் அமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதுகுறித்து அரசு பரிசீலினை செய்து வருகிறது

ஒட்டன்சத்திரம், ஆத்தூர், வேடசந்தூர், திண்டுக்கல், கரூர், அரவகுறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அமராவதி – காவிரி உபரி நீரை கொண்டு வரும் பணிகளை நீர்வள அலுவலர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதில் இதுவரை 1.70 இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி வழங்கப்பட்டு நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தனி துறை உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு இடுபொருள்கள், வேளாண் கருவிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் விடியல் பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

படித்த இளைஞர்களை அரசு பணிக்கான போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், காளாஞ்சிபட்டியில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தொப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 28 இடங்களில் விளையாட்டு மைதானம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்கள். அதில் ஒட்டன்சத்திரத்தில் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டை குடிசையில்லா மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதில் முதற்கட்டமாக ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்ஆட்சி பொறுப்பேற்ற பின்பு 18 இலட்சம் குடுபங்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. நெல்லுக்கு ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சொல்வதையும் செய்வோம், சொல்லாதையும் செய்வோம் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறினார்கள். அந்த வகையில் காலை உணவுத்திட்டம், இன்னுயிர் காப்போம் 48 திட்டம் செயல்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் 48 மணி நேரத்திற்கு ஏற்படும் மருத்துவ செலவினை அரசு ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு நபருக்கு ரூ.2 இலட்சம் மதிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மானுார் ஊராட்சியில் நபார்டு திட்டத்தில் ரூ.5.69 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல், புஷ்பத்துார் ஊராட்சியில் ரூ.15.69 கோடி மதிப்பீட்டில் 373 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி கே.தாகிரா மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.