Close

The Hon’ble Food minister Inspection

Publish Date : 27/12/2021
.

.

செ.வெ.எண்:-64/2021

நாள்:25.12.2021

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் முன்னிலையிலும் ஒட்டன்சத்திரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

2022-ஆம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்துள், மல்லித்துள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைபருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, துணிப்பை ஆகிய 20 வகை மளிகை தொகுப்புடன் ஒரு முழுநீள கரும்பு ஆகியன வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 747 முழுநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 288 பகுதிநேரக் கடைகள் ஆக மொத்தம் 1035 நியாயவிலைக் கடைகளில் உள்ள 6,64,970 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. நாளது தேதியில் மளிகை தொகுப்பானது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிகளில் 40% அளவிற்கு வரப்பெற்று நியாயவிலைக் கடைகளுக்கு 23.12.2021 முதல் அனுப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிகளில் மளிகைப் பொருட்களின் தரம், எடை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மளிகை தொகுப்புகளை எடைகுறைவின்றி நியாயவிலைக் கடைகளுக்கு விரைந்து அனுப்பிட கிட்டங்கி பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.

ஆய்வின் போது, பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆனந்தி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.மு.முத்துச்சாமி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.