Close

The Honble Food minister- Introduced New Bus Route in Devathur

Publish Date : 30/11/2021
.

செ.வெ.எண்:-78/2021

நாள்:29.11.2021

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தேவத்தூரில் இன்று(29.11.2021) புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்களின் வழிகாட்டுதல்படியும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவைகளை, திண்டுக்கல் மாவட்டம், தேவத்தூரில் இன்று (29.11.2021) தொடங்கி வைத்தார்கள்.

திண்டுக்கல் மேற்கு மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில், ஒட்டன்சத்திரம் முதல் விருப்பாட்சி, சத்திரப்பட்டி, போடுவார்பட்டி வழியாக தேவத்தூர் வரையிலும், பழனி முதல் கணக்கன்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, தேவத்தூர், கள்ளிமந்தையம், கூத்தம்பூண்டி, மூலனூர், வெள்ளகோவில், முத்தூர், மொடக்குறிச்சி, ஈரோடு வரை என புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.க.பொன்ராஜ், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி ரா.சத்தியபுவனா, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்;தலைவர் திருமதி மு.அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத்;தலைவர் திரு.பி.சி.தங்கம், தேவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி ந.சுதா நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.