Close

The Honble Food minister-Nangangiyaru DAM

Publish Date : 30/11/2021
.

.செ.வெ.எண்:-79/2021

நாள்:-29.11.2021

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று(29.11.2021) நங்காஞ்சியாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியில் மலர்கள் தூவினார்கள்.

காவிரி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றான அமராவதி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்று நங்காஞ்சியாறு ஆகும். நங்காஞ்சியாறு, திண்டுக்கல் மாவட்டம், பழனி மலையின் வடக்கு சரிவின் ஒரு பகுதியில்(மேற்கு தொடர்ச்சி மலை) உருவாகிறது. பரப்பலாறு, கோமாலியாறு மற்றும் மாஞ்சோலையாறு ஆகிய மூன்று அறுகளும்இணையும் இடத்தில் பரப்பலாறு அணை கட்டப்பட்டுள்ளது. பரப்பலாறு அணையிலிருந்து இந்த ஆறானது மலைப்பகுதிகளில் 500 மீட்டர் தூரம் பயணித்து, தலையூத்து என்னுமிடத்தில் திடீர் வீழ்ச்சியுடன் சமவெளிப்பகுதியை அடைகிறது. அதன்பின், திண்டுக்கல் மற்றம் கரூர் மாவட்டங்களில் 52 கி.மீட்டர் தூரம் பயணித்து இறுதியில் கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் கலக்கிறது.

இந்த ஆறு உருவான இடத்திலிருந்து தலையூத்து கிராமம் வரை (பரப்பலாறு அணை) பரப்பலாறு என்றும், அதன்பின் நங்காஞ்சியாறு என்றும் அழைக்கப்படுகிறது. நங்காஞ்சியாறு உருவான இடத்திலிருந்து 25 கி.மீட்டர் தொலைவில் இடையக்கோட்டை என்ற கிராமத்தில் நங்காஞ்சியாறு அணை கட்டப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணையில் தண்ணீர் நிரம்பி முழுக்கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேறி வருகிறது. அதையடுத்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று(29.11.2021) நங்காஞ்சியாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியில் மலர்கள் தூவினார்கள். பின்னர், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

நங்காஞ்சியாறு அணையின் மொத்த கொள்ளளவு 254.381 மில்லியன் கனஅடி, அணையின் மொத்த உயரம் 39.37 அடி. தற்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கன மழை காரணமாக நங்காஞ்சியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும். அணைக்கு நீர்வரத்து அதிகளவில் இருப்பதால் உபரி நீர் வெளியேறி வருகிறது.

நங்காஞ்சியாறு அணை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை, வலையப்பட்டி, நாரப்பநாயக்கன்பட்டி, கோவிந்தாபுரம் மற்றும் சின்னக்காம்பட்டி உட்பட சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 2,615 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல் கரூர் மாவட்டத்தில் சேந்தமங்கலம் கிழக்கு மற்றும் சேந்தமங்கலம் மேற்கு, குறிக்காரன் வலசு, குரும்பபட்டி, பழனிகவுண்டன் வலசு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 3,635 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆக மொத்தம் 6,250 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(நீர்வள ஆதார அமைப்பு -நங்காஞ்சியாறு வடிநிலக்கோட்டம்) திரு.கு.கோபி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி ரா.சத்தியபுவனா, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்;தலைவர் திருமதி மு.அய்யம்மாள், உதவிப்பொறியாளர்கள் திரு.தமிழ்ச்செல்வன், திரு.வெங்கடாசலம், திரு.சிவப்பிரகாசம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.மு.முத்துச்சாமி உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.