Close

The Hon’ble Food minister – Oddanchatram

Publish Date : 28/03/2022
.

செ.வெ.எண்:-51/2022

நாள்:26.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரனூர் வேல் மஹாலில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரனூர் வேல் மஹாலில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.03.2022) நடைபெற்றது. முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டைகள், கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதனக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவி, பொதுநகைக்கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகைகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின், கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களால் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவித்ததற்கிணங்க, தமிழகத்தில் சுமார் 12 லட்சம் நபர்கள் பயன்பெற்றுள்ளனர். இதன்மூலம், ரூ.6,000 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ.208 கோடி மதிப்பிலான கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 54,600 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டும் ரூ.20 கோடி மதிப்பிலான கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்தவிழாவில், தும்பலப்பட்டி, பூலாம்பட்டி, தொப்பம்பட்டி, புளியம்பட்டி, மேல்கரைப்பட்டி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்குட்பட்ட 246 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகைகள் வழங்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 நிவாரண உதவி வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இத்திட்டத்தின்கீழ், தமிழகம் முழுவதும் சுமார் 2.90 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.4,000 நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 60 இலட்சத்திற்கும் அதிகமான இலவச பேருந்து பயணம் திட்டத்தில் தினமும் பயனடைந்து வருகின்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வருமுன் காப்போம் திட்டத்தினை மீண்டும் துவக்கி வைத்துள்ளார். மேலும், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் தமிழகம் முழுவதும் 53 இலட்சம் நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில், தகுதியானவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை 11 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 36,000 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக 5,000 நியாயவிலைக்கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக்கடைகளை பிரிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஓட்டன்சத்திரம் காமராஜர் காய்கறி சந்தை வளாகத்தில், உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக 1,000 மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட புதிய குளிர்பதன சேமிப்பு கிட்டங்கி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கீரனூர் பேரூராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.82.95 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் மேம்பாட்டுப் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

முன்னதாக பொருளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 428 பயனாளிகளுக்கும், கூத்தம்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வீரப்பகவுண்டன் வலசு, கரியாம்பட்டி, கூத்தம்பூண்;டி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 190 பயனாளிகளுக்கும், புங்கமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புங்கமுத்தூர், வடபருத்தியூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 269 பயனாளிகளுக்கும் பொதுநகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.

மேலும் தொடர்ந்து, நரிக்கல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 414 பயனாளிகளுக்கும், மானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புஷ்பத்தூர் மற்றும் மானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 174 பயனாளிகளுக்கும், வேப்பன்வலசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மேலக்கோட்டை, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 218 பயனாளிகளுக்கும், தேவத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தேவத்தூர், பாப்பிநாயக்கன்வலசு, மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 220 பயனாளிகளுக்கும் பொதுநகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார். மேலும், வேப்பன்வலசு பகுதியில் நியாயவிலைக்கடையை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் திரு.ராமகிருஷ்ணன், துணைப்பதிவாளர் திரு.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.கிருஷ்ணசாமி, தொப்பம்பட்டி வேளாண்மை அலுவலர் திரு.காளிமுத்து, பழனி வட்டாட்சியர் திரு.சசி, கீரனூர் பேரூராட்சி தலைவர் திரு.கருப்புசாமி, முக்கிய பிரமுகர் திரு. சுப்பிரமணி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.