Close

The Hon’ble Food Minister Oddanchdram Kalanjipatty Free competitive exam center Inspection)

Publish Date : 25/05/2023
.

செ.வெ.எண்:-46/2023

நாள்:-25.05.2023

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டி ஊராட்சியில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் இலவச போட்டி தேர்வு பயிற்சிக்கான அனைத்து வசதிகளுடன்கூடிய கட்டிடங்கள் கட்டுமான பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடி மதிப்பிலான இலவச போட்டி தேர்வு பயிற்சிக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டுமான பணிகளுக்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதியதாக 4 அரசு கல்லூரிகளை வழங்கியுள்ளார்கள். மேலும், விருப்பாட்சியில் ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தினை வழங்கியுள்ளார்கள். அதோ போல, மாணவர்கள் போட்டி தேர்வு திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில், அதில் வெற்றி பெறும் வகையில் பயிற்சி அளிக்கக்கூடிய பயிற்சி மையம் மற்றும் நூலகத்தினை நமக்கு நாமே திட்டத்தில் வழங்கியுள்ளார்கள். காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடி மதிப்பில் பெரிய அளவிலான அனைத்து வசதிகளுடன்கூடிய பயிற்சி மையம் கட்டப்பட்டுவருகிறது. இப்பயிற்சி மையத்தில் வகுப்பறைகள், பயிற்சியாளர்கள் அறை, ஆசிரியர்கள் அறை, கணினி அறை, நூலகம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளவைகளும் அடங்கவுள்ளது. மேலும், 1000 பேர் அமர்ந்து படிக்கக்கூடிய வகையில் கருத்தரங்கு கட்டிடமும், உணவு அருந்தக்கூடிய உணவுருந்தும் அறைகளும் கட்டப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்களுக்கு தேவையான இருக்கை வசதிகளும், உட்புற சாலை வசதிகளும், வாகனம் நிறுத்தும் வசதிகளும், சுற்றுசுவர் வசதிகளுடன் சிறப்பாக இக்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் கட்டுமான பணிகளை 6 மாத காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.முத்துச்சாமி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரு.பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.