The Hon’ble Food Minister Program (Development Works)

செ.வெ.எண்:-63/2021
நாள்:25.12.2021
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.16.32 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டாவினை வழங்கினார்கள்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் முன்னிலையில், இன்று (25.12.2021) ஒட்டன்சத்திரம், காமாட்சி திருமண மண்டபத்தில், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.16.30 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டாவினை வழங்கினார்கள்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டாவினை வழங்கி தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று, தமிழக மக்களுக்கு அல்லும் பகலும், அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல அறிவிப்புகளை அறிவித்து, அத்திட்டங்கள் பலன்கள் அனைத்தையும் கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில், சிறப்பாக செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் பொறுப்பேற்றவுடன், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு காலத்தில் நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000, நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வசதி என பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்கள். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு செலவில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘உங்கள் தொகுதியில் மாண்புமிகு முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள, அதற்கான தனி அதிகாரியை நியமித்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, எஞ்சிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேறியதோடு மட்டுமல்லாமல், கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022-ன் கீழ் பேருந்து நிலையம் மற்றும் வார்டு பகுதிகளில் சிமெண்ட் தளம், தார்சாலைகள், நுண்உரக்கூடம், மழைநீர் வடிகால், சுற்றுச்சுவர் மற்றும் சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் ரூ.16.32 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
வருவாய் துறையின் சார்பில் 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 500 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெற ஆணையும், 120 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் பிரதமரின் வீடுவழங்கும் திட்டத்தின்கீழ் 48 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் என மொத்தம் 703 பயனாளிகளுக்கு ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சிகளில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆனந்தி, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திருமதி.ப.தேவிகா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ்,தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி ஆர்.சத்தியபுவனா, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.மு.முத்துச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.