Close

The Hon’ble Food minister-Ulavar vila

Publish Date : 25/10/2021
.

.

செ.வெ.எண்:-49/2021

நாள்:23.10.2021

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா) திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி – விரிவாக்கம் – விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் உழவர் விழாவை துவக்கி வைத்தார்கள்.

மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா) திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி – விரிவாக்கம் – விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும், உழவர் விழா திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி – வேல் மஹாலில் இன்று(23.10.2021) நடைபெற்றது.

விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தலைமை வகித்து, பயனாளிகளுக்கு உளுந்து, சோளம் விதைகள், கொய்யா, தென்னங்கன்று, தக்காளி நாற்று, விசைத்தெளிப்பான், பசுமை குடில் அமைக்க நிதி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் பொறுப்பேற்றவுடன், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள். விவசாயிகளின் நலனுக்காக வேளாண்மைத்துறைக்கு, தமிழக சட்டமன்றத்தில், தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், விவசாயிகள் நலன் கருதி பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா) திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி – விரிவாக்கம் – விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உழவர் விழா நடத்தப்படுகிறது.

தொப்பம்பட்டி வட்டாரத்தில் 2021-2022 அட்மா திட்டத்தின் கீழ் வறட்சியான பகுதியில் நீர் ஆதாரத்தை பெருக்கி, அங்கு விவசாயப் பரப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. அதன்படி மழைக்காலங்களில் உபரி நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை சேமித்து வைக்கும் வகையில், மின் மோட்டார்கள் மூலம் மழை நீரை தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சண்முகாநதி, நல்லதங்காள், நங்காஞ்சியாறு ஆகிய பகுதிகளில் 10 தடுப்பணைகள் அமைக்கப்படவுள்ளன. பரப்பலாறு அணை தூர்வாரப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரப்பலாறு முதல் நங்காஞ்சியாறு வரை நீர்வழித்தடத்தில் சிமெண்ட் சிலாப்புகள் அமைக்க ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டத்தின்படி, வாகரையில் 25 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் அவர்கள் ஆட்சி காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. அந்தவகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முருங்கை அதிகளவில் சாகுபடி நடைபெறும் 7 மாவட்டங்களை ஒருங்கிணைத்து முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்துள்ளார்கள். மேலும், தமிழகத்தில் மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விவசாயிகளில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள். மேலும், நெல்லுக்கு கூடுதல் ஆதார விலை மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்கள்.

விளையாட்டு மைதானம் அமைக்கவும், பழனி – ஈரோடு புதிய ரயில் பாதை அமைக்கவும், பழனியில் இருந்து திண்டுக்கல், திருச்சி வழியாக புதிய ரயில்கள் இயக்கவும் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், பொறுப்பேற்ற நேரத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகளவில் இருந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர் நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவ வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனா பாதிப்பு இருக்காது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன.

மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்கு, தனித்தனியாக முதல் பரிசாக ஒரு பவுன் தங்க காசு, இரண்டாம் பரிசாக எல்இடி தொலைக்காட்சி பெட்டி, மூன்றாம் பரிசாக குளிர்சாதன பெட்டி, ஆறுதல் பரிசாக 20 நபர்களுக்கு 1 கிராம் தங்க காசு ஆகியவை வழங்கப்படவுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியாவில் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதி என்றும், தமிழகத்தில் மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதம் வனப்பகுதிதான் உள்ளது என்றும், எனவே, தமிழக வனப்பகுதி பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை 70,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மரக்கன்றுகள், வலை, தண்ணீர் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் மரக்கன்றுகளை நடவு செய்வதோடு இருந்துவிடாமல், அவற்றை பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் தலைமையில் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால்தான், 5 மாதகால ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து, உள்ளாட்சி தேர்தலில் அதிக வெற்றியை அளித்து, பொதுமக்கள் கழக ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்கள் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், சென்னை தலைமைச் செயலகம், சிறப்பு திட்ட செயலாக்க முகமை, உதவி செயற்பொறியாளர்(வேளாண்மை) திரு.எஸ்.பிரிட்டோராஜ், மண் மற்றும் நீர் வள மேலாண்மை குறித்தும், திருச்சி துவாக்குடி, பாசன மேலான்மை பயிற்சி நிலையம், வேளாண்மை உதவி இயக்குநர்/உதவி பேராசிரியர்கள் திரு.பூச்சி என்.செல்வம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்தும், திரு.எம்.பிரபாகர், வேளாண் சந்தைப்படுததுதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், வேளாண்மை இணை இயக்குநர் திரு.எஸ்.பாண்டித்துரை, வேளாண்மை துறை இயக்குநர் (அட்மா திட்டம்) திருமதி பி.விஜயராணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.எஸ்.கிருஷ்ணசாமி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி ஆர்.சத்தியபுவனா, துணைத்தலைவர் திரு.பி.சி.தங்கம், ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் திரு.மோகன்குமார், திரு.முருகன், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஜே.பெருமாள்சாமி, பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருமதி எஸ்.மேகலா, வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் திரு.ஆர்.பார்த்தசாரதி, தொப்பம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் திரு.ஆ.காளிமுத்து, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.செந்தில்நாதன், செயலாளர் திரு.கந்தசாமி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.