Close

The Hon’ble Food Minister – (Varumun kappom )

Publish Date : 25/04/2022
.

செ.வெ.எண்:-64/2022

நாள்:23.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் மற்றும் கள்ளிமந்தயம் பகுதிகளில் “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாமினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கேஆர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம். கள்ளிமந்தயம் ஊராட்சி, திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று(23.04.2022) கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் மற்றும் வட்டார அளவிலான மருத்துவ முகாம் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் முகாமை துவக்கி வைத்தார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் முன்னிலையில் வகித்தார்.முகாம்களை துவக்கி வைத்து, கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனாளிகளுக்கு மருந்துகளை வழங்கி மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் வந்த ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டு காலமாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தவில்லை. தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதும் வருமுன் காப்போம் திட்டத்தை மீண்டும் துவக்கி வைத்துள்ளார்.ஏழை எளிய மக்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டு அதனை சரி செய்தவற்காக மட்டுமே மருத்துவர்களையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நாடிச் செல்கின்றனர். நோய்கள் வருமுன் அதனை தடுக்கும் அணுகுமுறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கிட கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் பயன்படும். இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைவார்கள். பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலன் குறித்த ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிதல், நோய்கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக உடல்நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” செயல்படும்.மேலும், கலைஞர் காப்பீடு திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 என பல்வேறு திட்டங்களை தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் நோய்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தமிழகத்தில் 55 இலட்சம் நபர்கள் பயனடைந்து வருகின்றனர்.அதேபோல் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தில் விபத்தில் சிக்கியவர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் உடனடி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அந்த உடனடி சிகிச்சையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தி, அதற்காக ஆகும் ரூ.ஒரு இலட்சம் தொகையை அரசே ஏற்கும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து தமிழக மக்களை பாதுகாக்கும் அரணாக உள்ளார்.

.

.

மேலும், கிராமங்கள், மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும என்பதற்காக கிராமங்களுக்கே சென்று மருத்துச சிகிச்சை அளிக்க 389 மருத்துவ வாகனங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்.இதுபோன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வரும் 30-ஆம் தேதி திண்டுக்கல்லுக்கு வருகை தரவுள்ளார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு நாளில் 20 மணி நேரம் மக்களுக்காக உழைக்கிறார். அதேபோல், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் அனைவரும் அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் திறம்பட செயல்பட வேண்டும்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அரசின் அனைத்து வளர்ச்சித்திட்டங்களும் சீரான முறையில் நிறைவேற்றப்படும். இவ்வாறு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.முன்னதாக, ஒட்டன்சத்திரம் கேஆர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஜிஸ்கொயர் டெவலப்பர்ஸ் நிறுவன பங்களிப்புடன் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் 30 வகுப்பறைகளுடன் அமைக்கப்படவுள்ள கட்டடத்திற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி மு.அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் திரு.பி.சி.தங்கம், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் திரு.செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலவலர் திரு.சீ.கருப்புசாமி, கள்ளிமந்தையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.கணேசன், வட்டார மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

.

.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.