Close

The Hon’ble Food Minister – (Varumun kappom)

Publish Date : 08/11/2021
.

...

செ.வெ.எண்:-11/2021

நாள்:07.11.2021

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், தொப்பம்பட்டி வட்டம், புஷ்பத்தூ ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி வளாகத்தில் “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்கள்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் முன்னிலையில் இன்று (07.11.2021) தொப்பம்பட்டி வட்டம், புஷ்பத்தூர், ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்கள்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சேலம் மாவட்டத்தில் ஏழை எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். ஏழை எளிய மக்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டு அதனை சரி செய்தவற்காக மட்டுமே மருத்துவர்களையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நாடிச் செல்கின்றனர். நோய்கள் வருமுன் அதனை தடுக்கும் அணுகுமுறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற சந்தனையை உருவாக்கிட கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் பயன்படும்.

இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைவார்கள். பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலன் குறித்த ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிதல், நோய்கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக உடல்நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” செயல்படும்.

இம்முகாம்களில் பன்முனை மருத்துவ பரிசோதனை கண், பல், காது – மூக்கு – தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீரிழிவு உயர் இரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள் இருதய நோய்கள் சிறுநீரக கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மனநல மருத்துவம், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு முருத்துவம் மற்றும் புற்றுநோய் மருத்துவம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். ஒவ்வொரு மாதமும் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டிய இடங்களை தேர்வு செய்து, எந்தெந்த நாட்களில் எந்தெந்த மருத்துவக்குழு, எந்தெந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து முகாம்கள் நடத்தப்படும். போக்குவரத்து வசதி அதிகமில்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமின் போதும் நல்வாழ்வு பற்றிய கண்காட்சி கிராமப்புற மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் முகாமிலேயே சிகிச்சையும் இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும். தொடர் சிகிச்சை தேவைப்படின் நோயின் தன்மையைப் பொருத்து எந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற செல்ல வேண்டும் என்ற விபரங்களுடன் அடையாள அட்டைகள் வழங்கப்படும். தொடர் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு தேவைப்படும் விவரங்கள் அனைத்தும் மாவட்ட அளவில் முகாம் வாரியாக கணினியில் பதியப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்ட முகாம்கள் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு பொது சுகாதாரம் மருத்துவக் கல்வி மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள், குடும்ப நலம், இந்திய மருத்துவம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு கழகம், கண்பார்வை இழப்பு தடுப்பு நிறுவனம், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம், சமூக நலத்துறை, கல்வித்துறை, ஊரகவளர்ச்சித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை போன்ற அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும். நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவதால் நோயின் பரவல் உடலில் பெருமளவில் இருக்காது. எனவே, பொதுமக்கள் அனைவரும், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாண்புமிகு முதல்வர் அவர்களின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் தொப்பம்பட்டி வட்டாரத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 98,124 நபர்களை கண்டறியும் பணி வீடு வீடாக நடைபெறுகிறது. இதில், வட்;டார அளவில் 2341 நபர்களும், புஷ்பத்தூர் ஊராட்சி அளவில் 42 நபர்களும் கண்டறிந்து பயனடைந்துள்ளனர்கள். கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தின்கீழ் வட்டார அளவில் 43 கர்ப்பிணிகளுக்கும், புஷ்பத்தூர் ஊராட்சி அளவில் 10 கர்ப்பிணிகளும் பயனடைந்துள்ளனர்கள். முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்திட்டத்தின்கீpழ் வட்டார அளவில் 1054 நபர்களுக்கு ரூ.15,94,000/- மதிப்பீட்டிலும், புஷ்பத்தூர் ஊராட்சி அளவில் 94 நபர்களுக்கு ரூ.2,10,000/- மதிப்பீட்டிலும், ஜனனி சுரக்ஷா யோஜனா மகப்பேறு உதவித்திட்டத்தின்கீழ் வட்டார அளவில் 43 நபர்களுக்கு ரூ.30,100/- மதிப்பீட்டிலும், ஊராட்சி அளவில் 10 நபர்களுக்கு ரூ.7,000/- மதிப்பீட்டிலும் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொப்பம்பட்டி வட்டாரத்தில் அக்கறைப்பட்டி ஊராட்சியில் 100மூ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் 5 மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 8 பயனாளிகள் என 13 நபர்களுக்கு ரூ.1,56,000/- மதிப்பீட்டில் உதவித்தொகையும், 74 பயனாளிகளுக்கு ரூ.51,80,000/- மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவும், 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 6 பயனாளிகளுக்கு மக்களைத்தேடி மருத்துவம் பெட்டி, 1 நபருக்கு பிறப்பு சான்றிதழ், 114 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆனந்தி, பழனி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.வே.யசோதாமணி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், ஒன்றிய துணைப்பெருந்தலைவர் திரு.ப.சி.தங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.க.கிருஷ்ணசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.ப.மணி, புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ம.செல்வராணி மகுடீஸ்வரன், புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி.வே.மஞ்சுளாதேவி முருகசாமி, தொப்பம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் மரு.மு.ராஜேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.