Close

The Hon’ble Forest Minister – EB & New bus inauguration Function

Publish Date : 08/07/2019
bus1

செ.வெ.எண்:22/2019 நாள்:06.07.2019

bus2

 

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பிரத்யேகமாக 24 மணி நேரமும் இயங்கும் மின்தடை குறைநீக்கும் கணினி மையம் மற்றும்
பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக பல்வேறு வழித்தடங்களில் செல்ல 30 புதிய பேருந்து இயக்கத்தினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மின் உற்;பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களுக்கு நன்மை பயக்கும் வகையில், திண்டுக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்;பட்டுள்ள பிரத்யேகமாக 24 மணி நேரமும் இயங்கும் மின்தடை குறைநீக்கும் கணினி மையம் மற்றும் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக பல்வேறு வழித்தடங்களில் செல்ல 30 புதிய பேருந்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் இன்று (06.07.2019) துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் தமிழக மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கி, தமிழக மக்கள் வாழ்வில் ஒளியேற்றி தந்தார்கள். மின்சார உற்பத்தியின் பொருளாதார நன்மைகள், விவசாயிகள், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து நல்ல முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டபடி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள 16 மின் பகிர்மான வட்டங்களில் ரூ.4.85 கோடி செலவில் கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுதுநீக்கும் மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு பிரத்தியேகமாக கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையம் திண்டுக்கல் மின் பகிர்மான வட்ட அலுவலக வளாகத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையம் மூலம் திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள திண்டுக்கல், வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம், வடமதுரை, வேடசந்தூர், எரியோடு, குஜிலியம்பாறை, சின்னாளப்பட்டி, கோபால்பட்டி, கொடைக்கானல், கோவிலூர், நிலக்கோட்டை, கள்ளிமந்தையம் ஆகிய பகுதிகளில் உள்ள 8,69,186 மின் இணைப்பு பயனீட்டாளர்கள் எவ்வித சிரமமுமின்றி நேரடியாக தங்கள் மின் இணைப்பில் ஏற்படும் பழுதுகளை தெரிவித்து, அவற்றை உடனடியாக சரிசெய்து கொள்ளலாம்.

இம்மையம் திண்டுக்கல் மாவட்டம், மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில்; அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மையம் 7 X24 மணி நேரமும் இயங்கும். தற்போது அனைத்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஊருபு ளுஐஆ கார்டு மின்வாரியத்தால் வழங்கப்பட்டு, மின்தடை சம்பந்தமான புகார்கள் பழுது நீக்கும் மையத்தில் பதிவு செய்தவுடன் பழுது நீக்கும் களப்பணியாளர்களுக்கு கணினி மூலம் தகவல் அனுப்பப்பட்டு நுகர்வோருக்கு காலதாமதம் ஏற்படாதவகையில் மின்தடை நிவர்த்தி செய்யப்படவுள்ளது.

எனவே, மின்தடை பற்றி புகார்களை 24 மணி நேரமும் பதிவு செய்ய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்;: 1912, 1800 425 5845, 0451 2445060. வாட்ஸ்அப் எண்: 9443361912. இந்த எண்களை பயன்படுத்தி நுகர்வோர்கள் தாங்கள் மின் இணைப்பு சம்பந்தமான புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்துகொள்ளலாம். இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், திண்டுக்கல் மண்டலம் சார்பாக திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக பல்வேறு வழித்தடங்களுக்கான புதியதாக 30 பேருந்துகள் இயக்கத்தினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் குறிப்பாக 11 பேருந்துகள் மலை கிராம மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படவுள்ளது. இதில் சோலைக்காடு, கிளாவரை, ஆடலூர், தாண்டிக்குடி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நிகழ்வுகளில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திருமதி.சே.தேன்மொழி, முன்னாள் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திரு.வி.மருதராஜ், திண்டுக்கல் பொதுமேலாளர்(தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்) திரு.ராஜேஸ்வரன், துணை மேலாளர்கள் திரு.ஆனந்தன், திரு.கணேசன் மற்றும் கிளை மேலாளர்கள், மின்துறை பொறியாளர்கள் திரு.கோல்டுவின் வில்லியம், திரு.கணேசன் மற்றும் மின்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.