Close

The Hon’ble Forest Minister Function

Publish Date : 22/06/2019
fun1

செ.வெ.எண்:-44/2019

நாள்: 22.06.2019

fun1

திண்டுக்கல் மாவட்டம்திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் கடந்த இரண்டாண்டுகளில் 18,76,775 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.118.62 கோடி மதிப்பீட்டில் 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு, மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர். சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளை சார்ந்த 63 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7.81 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் வழங்கி தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு, விலையில்லா மடிக்கணினியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் வழங்கி தெரிவித்ததாவது:-

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனி மனிதன் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் வண்ணம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், கல்வி கற்கும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், பள்ளி கல்வித்துறையில், இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கென அதிக நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு மகத்தான திட்டங்களை மாணவ, மாணவியர்களுக்கென செயல்படுத்தி கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர்கள் இன்றைய நவீன உலகில் நடைமுறையில் உள்ள உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு, தங்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவியர்கள் அவர்களின் திறமையை வளர்த்து தங்களது தகுதியை மேம்படுத்திக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் தங்களது நிலையையும், தங்களின் குடும்ப சூழ்நிலையையும் மேம்பாடு அடைய செய்ய முடியும். அதற்கு அடிப்படையாக அமைவது, என்றும் அழியா சொத்தான கல்வியே ஆகும்.

ஆகவே மாணவ, மாணவியர்கள் தரமான கல்வியை பெறவேண்டும் என்ற உயரிய நோக்கிலும், பெற்றோர்களின் சிரமங்களை குறைப்பதற்கும், பள்ளி கல்வித்துறையில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, கல்வி உதவித்தொகை, மதிய உணவு, புத்தகப்பை, காலணிகள், புவியியல் வரைபடம், வண்ணப்பென்சில்கள், கிரையான்ஸ் உட்பட கற்றலுக்குத் தேவையான 14 வகையான கல்வி உபகரணங்கள் அனைத்தையும் பாகுபாடின்றி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2017-2018-ஆம் நிதியாண்டில் 7,20,081 மாணவ, மாணவியர்கள் ரூ.46.06 கோடி மதிப்பீட்டிலும், 2018-2019-ஆம் நிதியாண்டில் 11,56,694 மாணவ, மாணவியர்கள் ரூ.72.56 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 18,76,775 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.118.62 கோடி மதிப்பீட்டில் 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு, பயன்பெற்றுள்ளனர். இன்றைய தினம், இவ்விழாவின் மூலம் திண்டுக்கல் சட்டமன்ற தொகுக்கு உட்பட்ட சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளை சார்ந்த 63 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7.81 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினியினை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,

திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து, ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, ஆய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதியினை மேம்படுத்தும் பொருட்டு, காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் இப்பள்ளிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதவிர, மாணவ, மாணவியர்களின் நலன் கருதி பள்ளி மேம்பாட்டிற்கென, ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு, கோரிக்கை மனு அளிக்கலாம். கோரிக்கை மனு தொடர்பாக, பரிசீலினை செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுதவிர, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பாக தற்போது அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் அரசு பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் சாதிசான்று, வருமானச்சான்று, சிறு குறு விவசாயிகள் சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை பொது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து, அதன் மூலம் எளிதில் சான்றிதழ்களை பெற்று பயன்பெற்று வருகின்றனர். இதனை விரிவு படுத்துவதன் காரணமாக, தகுதியுடைய தனியார்களுக்கும் பொது இ-சேவை மையம் அமைப்பதற்கும், அதன் மூலம் பொதுமக்களை பயன்பெற செய்வதற்கும், அனுமதி ஆணை வழங்க அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 501 தனியார் பொது இ-சேவை மையங்களும், இரண்டாம் கட்டமாக 498 தனியார் பொது இ-சேவை மையங்களும் அமைக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தனியார் பொது இ-சேவை மையங்கள் ஏற்படுத்தும் பொருட்டு 12 நபர்களுக்கு தற்சமயம் அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பயன்பெறலாம்.தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெறும் மாணவ, மாணவிகள் இதன் மூலம் தங்களது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தி கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் வி.மருதராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.சோ.சாந்தகுமார், தனிவட்டாட்சியர் (அரசு கேபிள் டிவி நிறுவனம்) திரு.நா.ராமையா, நல்லமநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் திரு.அ.ஜெயசீலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பிரேம்குமார் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.ச.ரேவதி மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்