Close

The Hon’ble- Forest Minister laptop distribution function at pattiveeranpatti – Dindigul

Publish Date : 24/06/2019
3

4

செ.வெ.எண்:-47/2019 நாள்: 23.06.2019
திண்டுக்கல் மாவட்டம்

பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி மேல்நிலைப்பள்ளியில் 186 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 23 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் என்.எஸ்.வி.வி. மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு, விலையில்லா மடிக்கணினியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தேன்மொழி முன்னிலையில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் வழங்கி தெரிவித்ததாவது:-

மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் தேவையை அறிந்து, கோரிக்கைக்கு முன்பாகவே திட்டங்களை அறிவித்து தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன்படி பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அத்திட்டங்களின் மூலம் மாணவ, மாணவியர்கள் தரமான கல்வியை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக அரசால் தற்சமயம் கல்வி கற்கும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெற வேண்டும்; என்ற உயரிய நோக்கில், பள்ளி கல்வித்துறையில், இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு பள்ளிக்கல்வித்துறைக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கென பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தி கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கிராமப்புறத்தில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையிலும், பெற்றோர்களின் சிரமத்தை குறைக்கின்ற வகையிலும், தமிழக மாணவ, மாணவியர்கள் வரலாறு படைக்கும் தொலைநோக்கு சிந்தனையுடன், தமிழக அரசால் போட்டி தேர்வுகளுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி முகாமினை ஏற்படுத்தப்பட்டு திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு, மேலும், ஊடீளுநு பாடத்திட்டத்தை முந்துகின்ற அளவிற்கும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கும் தமிழகத்தில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ளுஅயசவ ஊடயளள தொடங்கவும் 9 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.468 கோடி மதிப்பீட்டில் இணையதளவழிக்கல்வி முறையினை நடைமுறைப்படுத்தவும், மேலும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தலா ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர்கள் இன்றைய நவீன உலகில் நடைமுறையில் உள்ள உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு, தங்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவியர்கள் அவர்களின் திறமையை வளர்த்து தங்களது தகுதியை மேம்படுத்திக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் தங்களது நிலையையும், தங்களின் குடும்ப சூழ்நிலையையும் மேம்பாடு அடைய செய்ய முடியும்;. அதற்கு அடிப்படையாக அமைவது, என்றும் அழியா சொத்தான கல்வியே ஆகும்.

ஆகவே மாணவ, மாணவியர்கள் தரமான கல்வியை பெறுவதற்கு தமிழக அரசு, பள்ளி கல்வித்துறையில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, கல்வி உதவித்தொகை, மதிய உணவு, புத்தகப்பை, காலணிகள், புவியியல் வரைபடம், வண்ணப்பென்சில்கள், கிரையான்ஸ் உட்பட கற்றலுக்குத் தேவையான 14 வகையான கல்வி உபகரணங்கள் அனைத்தையும் பாகுபாடின்றி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.

தமிழக அரசால் மாணவ, மாணவியர்களுக்கென செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றான விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்கீழ் மட்டும், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 76,292 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.125.86 கோடி மதிப்பீட்டில், தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 41,955 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.12,400 மதிப்பீட்டிலான மடிக்கணினியினை ரூ.56.29 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும,; நடப்பாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, இன்றைய தினம், இவ்விழாவின் மூலம் எஸ்.என்.வி.வி. மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 186 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 23 இலட்சம் மதிபீட்டில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணவ, மாணவியர்கள் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நல்ல முறையில் கல்வி கற்று வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் வி.மருதராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.சோ.சாந்தகுமார், நிலக்கோட்டை முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் திரு.யாகப்பன், முன்னாள் கவுன்சிலர் திரு. பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள்; கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்