Close

The Hon’ble Forest Minister (Three Year Achievement Photo Exhibition)

Publish Date : 27/02/2020
12

செ.வெ.எண்:-46/2020 நாள்:-27.02.2020
திண்டுக்கல் மாவட்டம்

தமிழக அரசின் “முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்குச் சான்று” சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை – மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில்;, தமிழக அரசின் மூன்றாண்டு சாதனையை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் “முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்குச் சான்று” சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியினை இன்று (27.02.2020) திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் திறந்து வைத்து தெரிவித்ததாவது:-

மாண்புமிகு அம்மா வழியில் திறன்பட செயல்பட்டுக்கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

தமிழக அரசு மேற்கொண்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் நல் ஆளுமைத்திறனுக்கான தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம், கிருஷிகர்மான் விருதினை 5 முறை பெற்றது, ஊராட்சிகளில் மின்னணு ஆளுமை, வலிமைப்படுத்துதல், குழந்தைகள் நேயம், வலுவான கிராம சபை செயல்பாட்டிற்கென 12 தேசிய விருதுகள், உடல் உறுப்பு தானத்தில் 5 முறை தேசிய விருது, ஊரக வளர்ச்சித்துறையின் சிறப்பான செயல்பாட்டிற்காக 104 விருதுகள் இணைய வழி கற்றலில் முன்னோடி மாநிலத்திற்கான தேசிய விருது, மூத்த குடிமக்கள் சேவைக்காக தேசிய விருது என பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் தமிழ்நாடு அரசு பெற்று தொடர்ந்து முன்னேறி வருகிறது.

அந்த வகையில், கடந்த மூன்றாண்டுகளில், காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது, நீர் நிலைகளை பாதுகாக்க குடிமராமத்துத் திட்டம், நிர்வாக வசதிக்காக 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியது, 11 மாவட்டங்களில் புதிய அரசு மதுத்துவக் கல்லூரிகள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வெளிநாட்டு பயணங்களின் மூலம் ரூ.8,835 கோடி முதலீடுகள் ஈர்த்தது, 2.05 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கம், விவசாயிகளின் நலனுக்காக காவேரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க “நடந்தாய் வாழி காவேரி திட்டம்”, சேலம் மாவட்டத்தில் தலைவாசல் பகுதியில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா அமைத்தல், மகளிர் பாதுகாப்பிற்காக “காவலன் செயலி”, தமிழ்நாடு இ-வாகன கொள்கை-2019 வெளியிட்டது, விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இடஒதுக்கீடு, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்வி தொலைகாட்சி என எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை பல்வேறு துறைகளின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

அத்திட்டங்கள் மட்டுமின்றி, தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா அரிசி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், 10, 12ஆம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவிடன் கூடிய தாலிக்கு தங்கம், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், வண்ணபென்சில்கள், சீருடைகள், காலணிகள், ஜாமின்ட்ரி பாக்ஸ், விலையில்லா மிதிவண்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள். மேலும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிதிஉதவி, முதலமைச்சரின் விரிவானமருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் பயிர்கடன் தள்ளுபடி, அனைத்து குடும்பங்களுக்கும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும் விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கப்பட்டு வரும் திட்டங்களும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேற்கண்ட, இத்திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பான புகைப்படங்களும், மாவட்டத்தில் நீர்நிலைகளின் மறு சீரமைக்கும் பணியான குடிமராமத்து பணிகள் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவைகள் தொடர்பான புகைப்படங்களும், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் இக்கண்காட்சியில் இடம் பெற்று, பொதுமக்கள் பார்வையிட்டு, அரசின் நலத்திட்டங்கள் பற்றி எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இக்கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.வி.மருதராஜ், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பி.பி.பரமசிவம், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் திரு.சி.எஸ்.ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.பாரதிமுருகன், அறங்காவலர்கள் தேர்வு குழு தலைவர் திரு.பிரேம்குமார், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இ.சாலிதளபதி, ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.