Close

The Hon’ble Forest Minister Water Source Review Meeting – (Dgl Corparation)

Publish Date : 24/06/2019
1

2

செ.வெ.எண்:-45/2019 நாள்:- 22.06.2019

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நகர் மற்றும் ஊரக பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் – மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று (22.06.2019) திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நகர் மற்றும் ஊரக பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், முதன்மை நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர்; அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழகம் முழுவதும் தற்சமயம் மழை இல்லாத காரணத்தினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கென அரசால் துரிதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்து நேற்றைய தினம் (21.06.2019) சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் துறைசார்ந்த தலைமை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மேலும், மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்தாண்டு ஏற்கனவே ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து தற்சமயம் கூடுதலாக குடிநீர் திட்ட பணிகளுக்கென ரூ.200 கோடியும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு போதுமான அளவில் சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எதிர் கட்சிகள் பொதுமக்களிடையே குடிநீர் விநியோகம் குறித்து தவறான பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் குடிநீர் விநியோகம் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரை விட கூடுதலாகவே வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.

ஆனால், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் குறைபாடுகள் உள்ளதாகவும், குடிநீர் விநியோகம் செய்யும் குழாய்கள் பதிப்பதற்கு நிதி பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மூலமாக திட்ட அறிக்கை தயார் செய்து அரசிற்கு அனுப்பபட்டுள்ளது. விரைவில் அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே, போன்று திண்டுக்கல் ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 249 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காவேரி கூட்டுகுடிநீர் திட்டம் செல்லாத கிராமங்களுக்கு நீர் நிலைகள் உள்ள இடங்களை கண்டறிந்து ஆழ்துளை குழாய்கள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கும், பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைப்பதற்கும் மற்றும் பழுதடைந்துள்ள குடிநீர் குழாய் இணைப்புகளை சீர் செய்வதற்கும், இப்பணிகளை விரைவுபடுத்துவதற்காகவும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதனடிப்படையில், இன்றைய தினம் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய நகர் மற்றும் ஊரக பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து, முதன்மை நிலை அலுவலர்களுடனான ஆயு;வுக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், எந்தந்த பகுதிகளில் குடிநீர் தேவையுள்ளதை அறிந்து நிரந்தர தீர்வுகாணும் வகையில், ஊரக பகுதி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்கள், தேவையான குடிநீர் பணிகளுக்கென திட்ட அறிக்கையினை தயார் செய்யவும், பொதுமக்களின் அன்றாட தேவையான குடிநீர் வழங்கும் பணியினை தொய்வு இல்லாதவாறு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.கவிதா, முன்னாள் மேயர் திரு.வி.மருதராஜ், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர்(பொ) திரு.ஜீ.பாலசந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் திரு.பிரபுராம், உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்