Close

The Hon’ble HR Minister-food minister palani-covid19 vaccination above 15 age

Publish Date : 04/01/2022
.

செ.வெ.எண்:05/2022

நாள்:03.01.2022

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் முன்னிலையில் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி சின்னக்கலையம்புத்தூரில் உள்ள அருள்மிக பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை இன்று(03.01.2021) துவக்கி வைத்து, பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, திறம்பட செயல்படுத்தி தமிழகத்தில் பொற்கால ஆட்சியை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில், நமது மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பெருந்தொற்றினால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியும் தமிழகத்தில்தான் அதிகளவில் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணநிதி ரூ.4000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்களின் தொகுப்பினை வழங்கினார்கள்.

பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்காக அவர்கள் இல்லங்களுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் மக்களைத்தேடி மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டு அதனை சரி செய்தவற்காக மட்டுமே மருத்துவர்களையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நாடிச் செல்கின்றனர். நோய்கள் வருமுன் அதனை தடுக்கும் அணுகுமுறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு

ஏற்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கிட கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான “நம்மைக் காக்கும் 48” திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து, செய்படுத்தி தமிழக மக்களில் பாதுகாவலராக திறம்பட செயல்பட்டு வருகிறார்கள். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அயராத முயற்சியின் காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் திருமதி பாரதி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இணை ஆணையாளர் திரு.ந.நடராஜன், துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.யசோதாமணி, உதவி ஆணையாளர் திரு.செந்தில்குமார், பழனி வட்டாட்சியர் திரு.சசி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.