Close

The Hon’ble HR Minister – Palani

Publish Date : 04/01/2022
.

.செ.வெ.எண்:04/2022

நாள்:03.01.2022

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் கல்லூரியில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் மற்றும் தவில், நாதஸ்வரம் இசைக்கருவிகளை வழங்கி, வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் கல்லூரியில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் தவில், நாதஸ்வரம் இசைக்கருவிகள் வழங்கும் விழா இன்று(03.01.2022) நடைபெற்றது.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலையில், மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் மற்றும் தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கருவிகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க தமிழகத்தில் இதுவரை 652 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்கோயில்களில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பக்தர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் கண்டறியப்பட்டு, அளவீடு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 22,000 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இடங்கள் கண்டறியும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நாதஸ்வரம் மற்றும் தவில் கல்லூரியில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்ற நாதஸ்வர மாணவர்கள் 14 பேர் மற்றும் தவில் மாணவர்கள் 7 பேர் என்று 21 மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் மற்றும் இசைக்கருவிகள் இன்று வழங்கப்பட்டன.

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் சிறுவர் மற்றும் சிறுமியர் கருணை இல்லங்கள், மூத்த குடிமக்களுக்கான உறைவிடம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மூத்த குடிமக்களுக்காக ரூ.15.2 கோடி மதிப்பீட்டில் உறைவிடம் அமைப்பதற்காக மதிப்பீடு அங்கீகாரம் வேண்டி அறநிலையத்துறை ஆணையருக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டது. இத்திருக்கோயில் நிதியிலிருந்து அரசு நிதியுதவி பெறும் அருள்மிகு பழனியாண்டவர் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் சித்த மருத்துவமனை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 01.12.2021 அன்று காணொலி காட்சி வாயிலாக ஒட்டன்சத்திரம் வட்டம், சின்னையகவுண்டன்வலசு பகுதியில் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார்கள். இந்த கல்லூரிக்கு விரைவில் நிரந்தர கட்டடம் கட்டப்படும். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்குட்பட்ட கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்கள்.

தொடர்ந்து, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், பழனியில் சித்தா மருத்துவமனை அமையும் இடம், மனநலக்காப்பகம் அமையும் இடம், மூத்த குடிமக்களுக்காக் உறைவிடம் அமைக்கும் பணி, சின்னையக்கவுண்டன்வலசில் துவங்கப்பட்டுள்ள அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பழனி கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அன்னதான திட்டம் செயல்பாடு, கள்ளிமந்தயத்தில் உள்ள ஒருங்கிணைந்த கோசாலா, திருநீறு தயாரிப்புப் பணிகள் குறித்தும், ஒட்டன்சத்திரத்தில் தற்காலிக இடத்தில் செயல்பட்டு வரும் மகளிர் கலைக்கல்லூரி மற்றும் அந்த கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடம் ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் திருமதி பாரதி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இணை ஆணையாளர் திரு.ந.நடராஜன், உதவி ஆணையாளர் திரு.செந்தில்குமார், பழனி வட்டாட்சியர் திரு.சசி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.