Close

The Hon’ble HRNC Minister and The Hon’ble Food and Civil Supplies Minister (Palani Kovil Inspection)

Publish Date : 21/01/2023
.

செ.வெ.எண்:-46/2023

நாள்:20.01.2023

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 27.01.2023 நடைபெறவுள்ளதால் கும்பாபிஷேகம் முன்னேற்பாடு பணிகள் நடைபெறும், கோவில் யாகம் வளர்க்கும் பகுதிகள், திருக்கோவில் நீர் தெளிக்கும் கோபுர பகுதிகள், திருக்கோவிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் இன்று(20.01.2023) ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப, அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.காந்திராஜன் மற்றும் அறங்காவலர் உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின் போது, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:-

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் 27.01.2023 அன்று நாள் குறிப்பிடப்பட்டு வெகு விமர்ச்சியாக நடைபெற இருக்கின்றது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நடைபெறுகின்ற ஒவ்வொரு பணிகளையும் அவர் நேரடி கண்காணிப்பில் இந்த பணிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து கொண்டியிருக்கின்றார். அந்த வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கேற்ப திண்க்கல் மாவட்ட அமைச்சர்கள் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்களும், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐ.பி.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப, அவர்களும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப, அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன் அவர்களும் அரசு சார்பில் நடைபெறும் விழா என்று கருதாமல், தங்களுடைய சொந்த விழாவாக கருதி, ஒவ்வொரு பொருள் குறித்தும் நேரடியாக வந்து கள ஆய்வு மேற்கொண்டு, சிறந்த முறையிலும் இந்த திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே இருந்த கழிவறைகளை இடித்து, புதிய கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன. மொத்தம் 65 நிழற்கூடைகளில் 19 நிழற்கூடைகள் புதியதாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

அதே போல் முருக பெருமானுக்க வேல்வி நடத்துவதற்குண்டான அக்கனி குண்டங்கள் சுமார் 90 உருவாக்கப்பட்டியிருக்கின்றன. அதில் 33 முருக பெருமானுக்கு மட்டும் இந்த வேல்வி குண்டங்கள், யாக சாலைகள் உருவாக்கப்பட்டியிருக்கின்றன. குடமுழுக்கிற்கு 6000 நபர்களுக்கு சிறப்பு வி.ஜ.பி பாஸ்கள் (VIP Pass) வழங்கப்படவிருக்கின்றன. அதில் 3000 நபர்களுக்கு ஆன் லையனில் (Online) குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க உள்ளார்கள். வருகை தரவுள்ள முக்கியஸ்தர்கள், நீதி அரசர்கள் போன்றவர்கள் அமரும் இடங்கள், பொதுமக்கள் கும்பாபிஷேகத்தினை கண்குளிர கண்டு களிப்பதற்குண்டான யூடீப் சேனல்கள் போன்றவைகள் அனுமதிப்பது குறித்தும், கும்பாபிஷேகத்திற்கு வருகின்ற லட்சக்கணக்கான மக்களை ஒழுங்கு படுத்துவது குறித்தும், வருகின்ற வாகனங்களை நிறுத்துகின்ற இடங்களும், திருக்கோயில் மேலே அனுமதிக்கின்ற பக்தர்களுக்கு ஏற்கனவே திருக்கோயில் சார்பில் செயல்பட்டுக்கொண்டியிருக்கின்ற மருத்துவமனை அல்லாமல் தற்காலிக 4 மருத்துவமனைகள் ஏற்பாடு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். லட்சக்கனக்கான பொதுமக்களுக்கு அங்காங்கே மருத்துவ வசதிகள் கிடைப்பதற்குண்டான வழிவகைகள் ஏற்படுத்தப்படும்.

மேலும், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போதிய அளவிற்கு இந்த கும்பாபிஷேகம் மற்றும் தைபூசத்தை முன்னிட்டு பழனிக்கு வருகின்ற லட்சக்கனக்கான பக்தர்களுடைய அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்கின்ற அனைத்து பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டியிருக்கின்றோம். நாளை விரிவாக மதியம் 12.00 மணியளவில் காணோலி வாயிலாக அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, நடைபெறுகின்ற பணிகள் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. கும்பாபிஷேகத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எவை எல்லாம் தேவை என்பதை காணோலி வாயிலாக அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றோம். துறையின் சார்பில் கூடுதலாக 5 இணை ஆணையாளர்களையும், 5 துணை ஆணையாளர்களையும், 10 உதவி ஆணையாளர்களையும் இந்த திருப்பணிக்காக கூடுதலாக ஆணையாளர்கள் பணியாற்ற உள்ளார்கள். அவர்களோடு சேர்ந்து அந்தந்த ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், கூடுதல் ஆணையாளர்கள் இணைந்து திருக்கோயில் பணியாளர்களும் 15 முதல் 20 பணியாளர்கள் ஒருங்கிணைந்து ஒவ்வொரு பணிகளையும் பிரித்து அனைத்து பணிகளையும் குடமுழுக்குவிற்கு முன்பாக முடிக்கின்ற ஒரு நல்ல சூழலை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டியிருக்கின்றது.

அந்த வகையில் இன்று ஆய்விற்கு வருகை தந்து நடைபெறுகின்ற பணிகள் முழு திருப்தியாக இருக்கின்றது. இணை ஆணையாளர் நடராஜன் அவர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு, கடுமையாக இந்த பணிகள் நிறைவேற்வதற்கு உழைத்துக்கொண்டியிருக்கின்றார். அனைத்து பணிகளும் திருப்தியாக பக்தர்களின் மனம் குளிர்கின்ற அளவிற்கு இந்த கும்பாபிஷேகம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு நடைபெறும் என்பதில் பெருத்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆகம விதிகளுக்கு உட்பட்டு இந்த வேல்விகள் நடத்தப்படும் என்பதை ஏற்கனவே துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடமுழுக்கு தமிழிலும் மந்திரங்கள் ஓதப்படும். இதுவரை 47000 நபர்கள் முன்பதிவு செய்துள்ளார்கள். மேலும்.பலர் முன்பதிவு செய்து வருகிறார்கள், இதில் 3000 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 48 முதுநிலை திருக்கோயில்களிலும் பக்தி புத்தக விற்பனை நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று வெளியீட்ட புத்தகங்கள் அனைத்தும் அனைத்து திருக்கோயில்களிலும் புத்தக விற்பானை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பணிகள் உயர்மட்ட குழு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம். அந்த தீர்மானத்தை தொடர்ந்து, ஓராண்டு கடுமையாக துறையின் செயலாளர் மற்றும் ஆணையாளரும் தொடர்ந்து அந்த பணிகளை கண்காணித்து அந்த பணிகளை மேம்படுத்தியதால் நேற்றைக்கு அந்த நிகழ்வு கோலகலமாக ஒரு வரலாற்று சான்றாக அமைந்திருக்கின்றது. அதோடு பதிப்பகத்துறையையும் மேம்படுத்தியிருக்கின்றோம். அதே போல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புத்தக விற்பனை கூடத்தையும் திறந்து வைக்கப்படுள்ளது. ஓலைச்சுவடிகள் ஆராய்ச்சி மையத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டியிருக்கின்றார். நேற்று நடந்த நிகழ்வு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் பொண்ணேட்டுகளால் பதிக்கப்படவேண்டிய ஒரு நிகழ்வு. பழனி திருக்கோயில் 53 ஏக்கர் நிலம் ரூ.58 கோடி மதிப்பீட்டில் கையகப்படுத்துகின்ற அரசாணை தற்போது தான் வெளியிடப்பட்டியிருக்கின்றது. 15 ஆண்டுகள் கனவு அந்த இடங்கள் முழுமையாக கைபற்றப்பட்டு பெருந்திட்ட வரைவில் அந்த திட்டங்களையும் சேர்த்துக்கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் வருகின்ற லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் போதிய அடிப்படை வசதிகளை செய்து தர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இரண்டாவது ரோப்கார் திட்டம் ஆய்வில் உள்ளது. தற்போது நடைபெறும் குடமுழுக்கு விழா முடிந்து பின்பு அந்த பணிகளை துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பழனி மலைக்கும் இடும்பன் மலைக்கும் இடையில் ரோப்கார் வசதிகள் ஏற்படுத்துவது குறித்து பெருந்திட்ட வரைவில் சேர்க்கப்பட்டியிருக்கின்றன. அதற்குண்டான சாத்திய கூறுகள் இருக்கின்றன என வள்ளுநர் குழு அறிக்கை அளித்துள்ளது. பெருந்திட்ட வரைவு தொடங்கப்படுகின்ற போது அந்த பணிகளும் தொடங்கப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திட்டமிட்டப்படி செல்வது எதுவாக இருந்தாலும், அதை செய்ய வேண்டும் என்ற முனைப்போடு, சொல்லிய பிறகு அது குறித்து ஆய்வு செய்கின்ற ஒரே முதல்வர் ஒன்றிய கண்டத்தில் இருக்கின்றார் என்றால் மாண்புமிகு தமிழக முதல்வராக தான் இருக்க முடியும். அந்த வகையில் ஆட்சி ஏற்பட்ட பிறகு அறிவித்த அறிவிப்புதான் திருசெந்தூரில் ரூ.300 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தோம் அந்த பணிகள் துவக்கப்பட்டு தற்போது 8000 சதுர அடி அளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒட்டு மொத்தமாக 2,80,000 சதுர அடிக்கு பணிகள் நடைபெற இருக்கின்றன. சொன்னதை செய்கின்ற முதலமைசசர் நிச்சையமாக அறிவித்துள்ள அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

கும்பாபிஷேக சிறப்பு ஏற்பாடாக 16 இடங்களில் எல்.இ.டி(LED) பொருத்தப்பட்டு பக்தர்கள் அனைத்து பகுதிகளிலிருந்தும் கும்பாபிஷேக நிகழ்வை காணுகின்ற அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

இந்தஆய்வின் போது, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருமதி பாரதி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் இணை ஆணையர் திரு.நடராஜன், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திரு.கே.எம்.சுப்பிரமணியன், திரு.ரா.ராஜசேகரன், திருமதி சத்யா, திரு.ச.மணிமாறன், பழனி வட்டாட்சியர் திரு.சசி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் துணை ஆணையர் திரு.பிரகாஷ், உதவி ஆணையர்கள் திருமதி லட்சுமி, திரு.சுரேஷ் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.