The Hon’ble Milk minister – Inspection
செ.வெ.எண்:-20/2025
நாள்:-08.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 10.06.2025 அன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 10.06.2025 அன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் அவர்கள், 10.06.2025 அன்று திண்டுக்கல் பால் பண்ணையில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்துடன் தொடர்புடைய துறைகளின் முதன்மை அலுவலர்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்கிறார்.
இந்நிகழ்வின்போது, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.