Close

The Hon’ble Minister’s Kodaganar Dam Open

Publish Date : 22/11/2021
.

.

செ.வெ.எண்:-59/2021

நாள்:- 22.11.2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேடசந்தூர் வட்டம், அழகாபுரியில் உள்ள குடகனாறு அணையிலிருந்து உபரி நீர் திறந்து வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அழகாபுரியில் உள்ள குடகனாறு அணையிலிருந்து இன்று (22.11.2021) உபரி நீர் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அழகாபுரியில் உள்ள குடகனாறு அணையிலிருந்து இன்று உபரி நீர் 54 க.அடி / வினாடி, வெள்ளியனை வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் வலது பிராதானக் கால்வாயில், திண்டுக்கல் மாவட்டத்தில் 3830 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 3500 ஏக்கர் நிலங்களும், நிலத்தடி நீர்மட்டம் உயர குடகனாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுபகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 432.75 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 1237.22 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றது.

அணையின் முழு கொள்ளளவு 434.035 மி.க.அடி, 22.11.2021 அன்று அணையில் உள்ள நீர் இருப்பு 264.12 மி.க.அடி, அணையின் மொத்த நீரின் ஆழம் 27 அடி, 22.11.2021 அன்று நீரின் ஆழம் 22.43 அடி, அணைக்கு இன்றைய நீர் வரத்து 87 க.அடி / வினாடி, நிலத்தடி நீர்மட்டம் உயர திறந்துவிடப்படும் நீரின் அளவு 54 க.அடி / வினாடி.

மேலும், இதன் மூலம் வலது பிராதானக் கால்வாயில், திண்டுக்கல் மாவட்டத்தில் 3830 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 3500 ஏக்கர் நிலங்களும், நிலத்தடி நீர்மட்டம் உயர குடகனாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 432.75 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 1237.22 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றது.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் குடகனாறு அணை சிறப்பாக கட்டப்பட்டது. இப்பகுதியில் உள்ள விவசாய பொதுமக்களின் விவசாயம் செழிப்பதற்காக, நல்ல நோக்கத்துடன் கட்டப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றவுடன், பொதுப்பணித்துறையின் மூலமாக, தமிழ்நாட்டில் உள்ள தடுப்பணைகளின் கதவுகள் கடந்த 8 ஆண்டுகளில் பழுது பார்க்காமல் இருந்தது. தற்போது, நடவடிக்கை மேற்கொண்டு, உரிய காலத்தில் பழுது நீக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் அனைத்து அணைகளிலும் 100 சதவீகிதம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். காரணம் எந்த சூழ்நிலையிலும், விவாசாயத்திற்கு தண்ணீர் கேட்காமலோ அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், வேடசந்தூர் வட்டாட்சியர் திருமதி.மணிமொழி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) திரு.கு.கோபி, உதவி பொறியாளர் திரு.அ.முருகன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.