Close

The Hon’ble Minister’s (Vaigai Dam Water Release)

Publish Date : 14/11/2023
.

செ.வெ.எண்:-29/2023

நாள்:-10.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு பத்திரபதிவுத்துறை அமைச்சர் திரு.மூர்த்தி அவர்கள் இரு போக பாசனத்தின் முதல் போக பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்கள்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு பத்திரபதிவுத்துறை அமைச்சர் திரு.மூர்த்தி அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இரு போக பாசனத்தின் முதல் போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீரை இன்று (10.11.2023) திறந்து வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப்பகுதியில் இரு போக பாசனப் பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு விநாடிக்கு 900 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் இன்று முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 6,739 மி.க.அடி நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அதன்படி, பெரியாறு பாசனப்பகுதியில் இரு போக பாசன நிலங்களில் முதல் போகத்திற்கு (பேரணை முதல் கள்ளந்திரி வரை) வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பதால் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 1,797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 16,452 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட 26,792 ஏக்கர் நிலங்களும், மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட 1797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டத்திற்குட்பட்ட 43,244 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். எனவே, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களை சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.

இந்நிகழ்வில், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தமிழ்செல்வன், செயற்பொறியாளர் திரு.தமிழ்செல்வன் (நீர்வள ஆதாரத்துறை), உதவி பொறியாளர் திரு.செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.