Close

The Hon’ble Rural Development Minister – Samuthaya Valaikappu Program

Publish Date : 21/04/2023
.

செ.வெ.எண்:-19/2023

நாள்:15.04.2023

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவில் 400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பட்டி சவரிமுத்துப்பிள்ளை திருமண மண்டபத்திலும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய ஸ்ரீராமபுரம் பேரூராட்சி அஜீஸ் திருமண மண்டபத்திலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா இன்று (15.04.2023) நடைபெற்றது.

இவ்விழாவில் மாண்புமிகு மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பங்கேற்று ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 200 கர்ப்பிணித்தாய்மார்களுக்கும், ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தை சார்ந்த 200 கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் என மொத்தம் 400 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் நடைபெறும் வளைகாப்பு விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனது குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சி போன்றதாகும். கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஆதிகாலத்தில் கட்டிசோறு கட்டி கொண்டு செல்லும் விழா நமது பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. அதுபோலவே, இந்த சமுதாய வளைகாப்பு விழா ஏழை, எளிய கார்பிணிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்நிகழ்ச்சிகள் சிறப்பாக தமிழக அரசின் சார்பில் நடைபெறுகிறது. இது நமது குடும்ப பிள்ளைகள் பங்கேற்றுள்ள சிறப்பான நிகழ்ச்சியாகும். கர்ப்பிணித்தாய்மார்கள் நீண்ட ஆயிலோடு, மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். கர்ப்பிணித்தாய்மார்கள் குழந்தை பிறப்பு என்பது தாய் வயிற்றிலிருந்து பிறப்பதை போன்ற முக்கிய நிகழ்வாகும். உலகில் சீனாவும், இந்தியாவும் மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடாகும். தற்போது சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. அவர்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி குழந்தைகளை அதிகமாக பெற்றுக்கொள்ளும் திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் உள்ளது. நமது கர்ப்பிணித்தாய்மார்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிதாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், ஊட்டத்தை தரக்கூடிய அளவிலும் இவ்விழா நடைபெறுகிறது.இவ்விழாவில் மருத்துவர்கள் பங்கேற்று நல்பல ஆலோசனைகளை உங்களுக்கு வழங்கியுள்ளார்கள். கார்ப்பிணித்தாய்மார்கள் அனைவரும் நல்ல முறையில் குழந்தைகளை பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். இந்த உயிரோட்டமான அர்ப்புதமான நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என பேசினார்.

இவ்விழாவில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு தட்டு, சேலை, பேரிச்சாம்பழம், கடலைமிட்டாய், வளையில், குங்குமம், வாழைப்பழம், குழந்தை ஆரோக்கிய பூரிப்பு கையேடு, உள்ளிட்ட பல பொருட்களை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.

ஸ்ரீராமபுரத்தில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சுகாதாரத்துறையின் சார்பில் 4 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.பாஸ்கரன், ஒன்றியக்குழுத்தலைவர்கள் ஆத்தூர் திருமதி மகேஸ்வரி முருகேசன், ரெட்டியார்சத்திரம் திரு.ப.க.சிவகுருசாமி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தலைவர் திருமதி சகிலா, பேரூராட்சி துணைத்தலைவர் திரு.முருகேசன், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.சரவணன், முக்கிய பிரமுகர்கள் திரு.சத்தியமூர்த்தி, திரு.ராமன், திரு.முருகேசன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி.பூங்கோடி, ஆத்தூர் குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் திருமதி.காலிங் செல்வராணி, ரெட்டியார்சத்திரம் குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் திருமதி மெர்லின் அன்னமலர், கர்ப்பிணித்தாய்மார்கள், பெரியோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.