Close

The Hon’ble Rural Development Minister – Schemes – Development Work – Function

Publish Date : 05/02/2024
.

செ.வெ.எண்:-02/2024

நாள்:01.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.00 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, 33 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.00 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(01.02.2024) திறந்து வைத்து, 33 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கினார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதியோர் உதவித்தொகை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படுகிறது. முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கு தகுதியிருப்பின் அவர்களுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் சுயமாக குடியிருப்புகள் கட்டி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக வீடு கட்டி வழங்கும் திட்டம், இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தினசரி சம்பளம் ரூ.300 வரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆத்துார் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பிள்ளையார்நத்தம் ஊராட்சி பிள்ளையார்நத்தத்தில் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் செட்டியப்பட்டி ஊராட்சி, வேளாங்கன்னிபுரத்தில் ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை, இராஷ்டிரிய கிராம் சுவராஜ் அபியான் திட்டத்தில் கலிக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.23.56 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் ரூ.12.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை, காந்திகிராமம் ஊராட்சி, அண்ணாநகரில் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், ரூ.12.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை, இ.பி. காலனியில் ரூ.10.91 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை என மொத்தம் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(01.02.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 33 பயனாளிகளுக்கு ரூ.5.73 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்கள் தங்களுக்கென சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பதற்காக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி, வீடுகள் கட்டி வழங்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது மக்களின் அரசு, இது உங்களின் அரசு, அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த, இந்த அரசுக்கு என்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி பத்மாவதி ராஜகணேஷ், பேரூராட்சித் தலைவர் திருமதி இரா.பிரதீபா, ஊராட்சி மன்ற தலைவர் திரு.உலகநாதன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.