Close

The Hon’ble Tamilnadu CM – Agri New building Opening

Publish Date : 16/11/2021
.

செ.வெ.எண்:-37/2021

நாள்:16.11.2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் ரூ.17.22 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள, புதிய கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(16.11.2021) திறந்து வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் ரூ.17.22 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள, புதிய கட்டிடங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(16.11.2021) திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சி.பள்ளப்பட்டி கிராமம், பாறைப்பட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள 2,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிட்டங்கியில் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் ரூ.17.22 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி, வேளாண்மைத்துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் 2019-20-ன் கீழ் நத்தம் மற்றும் நிலக்கோட்டை வட்டாரங்களில்;, தலா ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், திண்டுக்கல் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் வத்தலகுண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.565 கோடி மதிப்பீட்டில் 1,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.5.835 கோடி மதிப்பீட்டில் 2,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 கிடங்குகள், ஒட்டன்சத்தரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2.835 கோடி மதிப்பீட்டில் 2,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, வடமதுரை(அய்யலூர்) ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2.585 கோடி மதிப்பீட்டில் 1,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு மற்றும் அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகள் யாவும் முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்) திரு.பெ.ரவிபாரதி, திண்டுக்கல் வேளாண் விற்பனைக்குழு செயலாளர் திரு.மு.வே.சந்திரசேகர், திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கண்காணிப்பாளர் திரு.நா.ராமன், மேலாளர் திருமதி தெ.மகாலட்சுமி, உதவிப்பொறியாளர் திரு.வடிவேலு, சி.பள்ளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.பரமன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.