Close

The Hon’ble TN Chief Minister-College inaugration – Oddanchatram

Publish Date : 01/12/2021
.

.

pr011221_1245

செ.வெ.எண்:-01/2021

நாள்:01.12.2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், சின்னையகவுண்டனவலசில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இன்று(01.12.2021) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக்கோரிக்கை 2021-2022 அறிவிப்பு எண்.5ன் படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ், ஒட்டன்சத்திரம் வட்டம், சின்னையகவுண்டன்வலசில் புதிதாக அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒட்டன்சத்திரம் வட்டம், சின்னையகவுண்டனவலசில் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இன்று(01.12.2021) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, புதிய கல்லூரி வளாகத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே, இரண்டு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் ஒரு தொழில்நுட்ப கல்லூரி பழனி நகரில் இயங்கி வருகின்றன. அங்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகளவில் இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வலியுறுத்தினோம்.

அதன்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கல்லூரியும், உயர்கல்வித்துறை சார்பில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கல்லூரியும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பழனியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் சித்தா கல்லூரி தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒட்டன்சத்திரம் வட்டம், சின்னையகவுண்டன்வலசில் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இன்று காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற 6 மாதங்களில் சின்னையகவுண்டனவலசில் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கும் இந்தக் கல்லூரி அடுத்தக் கல்வியாண்டு முதல் ஒட்டன்சத்திரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்படும். மேலும், தொப்பம்பட்டியில் உயர்கல்வித்துறை சார்பில் மேலும் ஒரு கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, ரெட்டியார்சத்திரம் மற்றும் வேடசந்தூர் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள், சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல்லிற்கோ அல்லது 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழனிக்கோ சென்று உயர்கல்வி பயிலவேண்டி இருந்த நிலையை மாற்றி, ஒட்டன்சத்திரம் வட்டத்திலேயே கல்லூரி அமைய ஆணைகள் வழங்கி, பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நனவாக்கி உள்ளார்கள்.

திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி விரைவில் தொடங்கப்படவுள்ளது. திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டவுடன், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை பழனியில் அமைக்கப்படவுள்ளது. தொப்பம்பட்டியில் அனைத்து வசதிகளுடன் அரசு மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.

பரப்பலாறு அணை தூர்வாரவும், விவசாய விளைபொருட்களை சேமிக்க குளிசாதன வசதியுடன் கிடங்கு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம், தடுப்பணைகள் என விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பழனியில் பச்சையாறு அணை கட்டப்படவுள்ளது. குதிரையாறு, பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, நல்லதங்காள்-நங்காஞ்சியாறு, குடகனாறு, சந்தனவர்த்தினியாறு ஆகிய 6 ஆறுகளை இணைக்கும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஒட்டன்சத்திரத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமை பயன்படுத்து படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.

விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இணை ஆணையாளர் திரு.ந.நடராஜன், கல்லூரி முதல்வர் திருமதி வாசுகி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்;தலைவர் திருமதி மு.அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி ரா.சத்தியபுவனா உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.