The Hon’ble TN CM-DADWO-New Building Opening

செ.வெ.எண்:-39/2021
நாள்:17.11.2021
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்,திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கிராமம், குளத்துப்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி புதிய கட்டிடத்தினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(17.11.2021) திறந்து வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், குளத்துப்பட்டியில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி புதிய கட்டிடத்தினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(17.11.2021) திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
தமிழக அரசால் நபார்டு வங்கி உதவித்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், நிலக்கோட்டை கிராமம் குளத்துப்பட்டியில் சுமார் 25 சென்ட் நிலப்பரப்பில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் ஒன்பது அறைகள் கொண்ட அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி, 50 மாணவிகள் தங்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதனால் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வெளியூர் மற்றும் வெகுதொலைவில் இருந்து கல்வி பயில வரும் ஆதிதிராவிட மாணவியர்கள் பயன்பெறுவர். மேலும், அவர்களது கல்வி மற்றும் குடும்பத்தரம் மேம்படும்.
குள்ளத்துப்பட்டியில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி அமைக்க 25 சென்ட் நிலம் நன்கொடை அளித்த முத்துலிங்கபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு.கே.பாக்கியநாதன்(வயது 86) அவர்களை கௌரவிக்கும் வகையில், அவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், பொன்னாடை அணிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், தாட்கோ செயற்பொறியாளர்(பொறுப்பு) திருமதி பச்சவடிவு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.எஸ்.சண்முகம் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,திண்டுக்கல்.