Close

The Honorable Co-op Minister -launched the 108 Ambulance Service -Dindigul District

Publish Date : 15/03/2022
.

செ.வெ.எண்:-21/2022

நாள்:14.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள்,மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதியதாக வழங்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்கள்.

மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதியதாக வழங்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதி பிரகாஷ், பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல் பழைய நீதிமன்றம் அருகில் இன்று(14.03.2022) துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

இந்தியாவில் 108 ஆம்புலன்ஸ் சேவை, அவசரகால மேலாண்மை சேவைகளில் முன்னோடியாக உள்ளது. 2008-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுடன், பொது – தனியார் கூட்டாண்மையில் இயங்கும் ஒரு இலாப நோக்கற்ற தொழில்முறை அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் 34 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், 2 மேம்பட்ட லைஃப் சப்போர்ட் ஆம்புலன்ஸ்கள், 2 பிறந்த குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ்கள், 29 அடிப்படை லைஃப் சப்போர்ட் ஆம்புலன்ஸ்கள் மற்றும் 1 பைக் ஆம்புலன்ஸ் வழக்கமான செயல்பாடுகளில் உள்ளன.

திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியை மேம்படுத்தும் பொருட்டு, கூடுதலாக நவீன வசதிகளுடன் கூடிய புதியதாக ஆம்புலன்ஸ் சேவை, ரெட்டியார்சத்திரம், சாலையூர், பாப்பன்பட்டி, சிலுவத்தூர் ஆகிய பகுதிகளுக்கு இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதன் சேவை அதிகரித்து வருவதையடுத்து, கூடுதலாக 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இடையகோட்டை சாலையூர் பிரிவு, சிலுவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், பழனி பாப்பம்பட்டி, ரெட்டியார்சத்திரம் ஆகிய இடங்களில் சேவையை தொடங்குகிறது

தற்போது, 79 எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் டெக்னீஷியன்கள் மற்றும் 80 பைலட்டுகள் அடங்கிய பணியாளர்களுடன் தினசரி ஆம்புலன்ஸ் செயல்பாடுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புதியதாக வழங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் பணிகளுக்கு, பணியாளர்கள் மார்ச் 3-வது வாரத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது, என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில்,இணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.பாக்கியலட்சுமி, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், மாநகராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்;, திண்டுக்கல்.