The World Environment Day -Iyampalayam

செ.வெ.எண்:-16/2025
நாள்:-06.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தில் நபார்டு வங்கியின் உதவியுடன் செயல்பட்டு வரும் அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் சார்பில் சுற்றுச்சூழல் தினவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான கருப்பொருளான ‘நெகிழி இல்லா பூமி’ என்ற துண்டறிக்கையை வெளியிட்டு, மரக்கன்றுகள் நடவு செய்து, ‘நெகிழி இல்லா பூமி’க்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் புதிய உணவுத் தயாரிப்புகளான மாம்பழக்கூழ் மற்றும் அன்னாசிப்பழக் கூழ் விற்பனையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அய்யம்பாளையம் நீர்வடித்திட்டம், காலநிலை மாற்றத் திட்டம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்ந்து நபார்டு வங்கியின் செயல்பாடுகள் குறித்து நபார்டு வங்கி அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அதிகாரி திரு ஹரீஷ் அவர்கள், அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.ஜோதி, நிறுவனப் பங்குதாரர்கள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.