TIIC -Business Loan Arrangement Special Camp

செ.வெ.எண்:43/2021
நாள்:16.12.2021
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் ரூ.76.49 இலட்சம் மதிப்பிலான கடன் மற்றும் மானிய உதவி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
திண்டுக்கல், பாண்டியன் நகரில்(காட்டாஸ்பத்திரி அருகில்) உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் (TIIC) கிளை அலுவலகத்தில் சிறப்பு தொழில் கடன் முகாம் 08.12.2021 முதல் 15.12.2021 வரை நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கடன் மற்றும் மானிய உதவி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் (TIIC) கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு, ரூ.76.49 இலட்சம் மதிப்பிலான கடன் மற்றும் மானிய உதவி ஆணைகள் மற்றும் தமிழ்நாடு அரசின் NEEDS திட்டத்தின் கீழ் TIIC-ல் கடன் உதவி பெற்று அதனை சரிவர திருப்பிச் செலுத்திய நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் (TIIC) கிளை அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழில் கடன் முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.76.49 இலட்சம் மதிப்பிலான கடன் மற்றும் மானிய உதவி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 6 சதவீதம் வட்டி மானிய சலுகை மற்றும் 25 சதவீதம் முதலீட்டு மானிய சலுகைகளை ஓரிடத்தில் பெற்றுக்கொள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின்(TIIC) சேவையினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் (TIIC) கிளை அலுவலக வளாகத்தில் வுஐஐஊ-ல் கடனுதவி பெற்றுள்ள தொழில் நிறுவனங்களின் பலதரப்பட்ட உற்பத்திப் பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள். மேலும், புதிய தொழில்முனைவோர்களது ரூ.20.46 கோடி மதிப்பிலான கடன் உதவி விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் (TIIC) சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
இந்தநிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திரு.எஸ்.மருதப்பன், திண்டுக்கல் மாவட்ட குறு மற்றும் சிறு தொழிற்சங்கத் தலைவர் திரு.ஏ.அண்ணாத்துரை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் மதுரை மண்டல மேலாளர் திரு.எம்.ரங்கராஜ் மற்றும் திண்டுக்கல் கிளை மேலாளர் திரு.எஸ்.முருகன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.