TN Assembly Public Accounts Committee Arrival
செ.வெ.எண்:-10/2025
நாள்: 04.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 05.03.2025 மற்றும் 06.03.2025 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவினர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 05.03.2025 மற்றும் 06.03.2025 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்(திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர்), மதிப்பீட்டுக்குழுத் தலைவர் திரு.ச.காந்திராஜன் அவர்கள்(வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர்), பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள்(அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்), சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திரு.ப.அப்துல் சமது, திரு.டி.இராமச்சந்திரன், திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், திரு.கோ.ஐயப்பன், திரு.எஸ்.சந்திரன், டாக்டர் சி.சரஸ்வதி, திரு.ப.சிவக்குமார் என்ற தாயகம் கவி, திரு.இ.பெ.செந்தில்குமார், திரு.ஆர்.டி.சேகர், திரு.எஸ்.சேகர், திரு. நத்தம் இரா.விசுவநாதன், திரு.மொ.பழனியாண்டி, திரு.ஜெ.முகம்மது ஷாநவாஸ், திரு.கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் உள்ளனர்.
இந்த ஆய்வுக் குழுவில் உறுப்பினர்களுடன், பேரவை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இக்குழுவினர் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் தணிக்கை பட்டியல் குறித்து மாவட்டத்தில் உள்ள உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடவும் மற்றும் இது தொடர்பான திட்டப்பணிகளை பார்வையிட உள்ளனர்.
இக்குழு திண்டுக்கல் மாவட்டத்தில், திட்ட பணிகளை ஆய்வு செய்தபின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.