Close

TN Legislative Assembly Public Accounts Committee Inspection

Publish Date : 30/03/2022
.

செ.வெ.எண்:-59/2022

நாள்:30.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர்,மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை இன்று(30.03.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவினர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை இன்று(30.03.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவின் உறுப்பினர்கள் திரு.எஸ்.ஆர்.இராஜா, அவர்கள் தலைவர், பொது நிறுவனங்கள் குழு (அலுவல் காரணமாக) தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர், திரு.எஸ்.காந்திராஜன், அவர்கள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர், திரு.ம.சிந்தனை செல்வன், அவர்கள் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர், திருமதி கு.மரகதம் குமாரவேல், அவர்கள் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர், திரு. கே.மாரிமுத்து, அவர்கள் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், திரு.ஈ.ராஜா, அவர்கள் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர், திரு.தி.வேல்முருகன், அவர்கள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர், முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, அவர்கள் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழு இணைச்செயலாளர் திருமதி பி.தேன்மொழி, அவர்கள், துணைச் செயலாளர் திருமதி பா.ரேவதி, அவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த குழுவினர், அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள காலநிலை அளவீட்டுக் கருவி மற்றும் அங்கு இயற்கை முறையில் செக்கு எண்ணெய் தயார் செய்யும் பணிகள், ஊட்டச்சத்துமாவு தயாரிப்பு பணிகள், மகளிருக்கு எம்ராய்டரி பயிற்சி அளித்தல் ஆகியவற்றை பார்வையிட்டனர். அங்கு தினமும் எவ்வளவு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது, எப்படி லாபகரமாக இயக்கப்படுகிறது என்பது குறித்து குழுவினர் கேட்டறிந்தனர்.அதனைத் தொடர்ந்து, ஆத்தூர் வட்டாரம், என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் என்.பஞ்சம்பட்டி ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை நெகிழி மறு சுழற்சி மையத்தினை பொதுக் கணக்குக் குழுவினர் பார்வையிட்டனர். இந்த கூட்டமைப்பில் எத்தனை மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளனர், தினமும் எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் எங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது, மறுசுழற்சி முறையில் தயார் செய்யப்பட்ட பிளாஸ்டிக் எங்கு வழங்கப்படுகிறது? என்பது குறித்து கேட்டறிந்தனர். அதற்கு மகளிர் கூட்டமைப்பினர், “பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி முறையில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்குகள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தனியார் சிலரிடம் வழங்குவதாகவும், இந்த மறுசுழற்சி பிளாஸ்டிக், சாலைகள் அமைக்க தாருடன் கலந்து பயன்படுத்தப்படுகின்றன”, என்று தெரிவித்தனர்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் திண்டி மா வனம் சார்பில் அடர் குறு வனம் திட்ட செயலாக்கத்தில், புதுப்பட்டி பொன்னிமாந்துறையில் 22 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் மியாவாக்கி காடுகள் வளர்ப்பு முறையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதை பொதுக் கணக்குக் குழுவினர் பார்வையிட்டனர். அங்கு பொதுக் கணக்குக் குழுவினர் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.

அதன்பின்னர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் திரு.செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள காலநிலை அளவீட்டுக் கருவி மற்றும் அங்கு இயற்கை முறையில் செக்கு எண்ணெய் தயார் செய்யும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு திருமதி சக்திஜோதி என்பவர் இயற்கை முறையில் காலநிலை கணக்கீடு மேற்கொள்ளும் முறை குறித்து கேட்டறிந்தோம். இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு காலநிலை பருவமாற்றம் குறித்து உடனுக்குடன் ஆப் மூலம் தெரிவித்து வருகிறார். இந்த இயற்கை முறையில் காலநிலை கணக்கீடு முறை தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களில்தான் உள்ளன.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆய்வுக்கூட்டத்தில், கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைவாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிகாலத்தில் தர்மபுரியில் தான் முதன்முதலில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டன. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, மகளிர் சுயஉதவிக்குழுவினர் தனியார் நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டிக்கு கடனுதவி பெற்று அவதிப்படுவதை தவிர்க்க வேண்டும். தேவையில்லாத இடங்களில் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஆதிவாசிகளுக்கு வன மகசூல் உரிமை, கொடைக்கானலில் மாஸ்டர் பிளான் இன்றி கட்டப்பட்ட கட்டடங்களை வரைமுறைப்படுத்துதல், ஒருவழித்திட்டத்தில் கொண்டு வருதல், அதற்கான சிறப்புத் திட்டங்கள் கொண்டு வருதல், சாலைகள் இல்;லாத பகுதிகளுக்கு சாலைகள் அமைத்தல் பணிகள், வனக்குழுக்களை முறைப்படுத்தல் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து நாளை(31.03.2022) கொடைக்கானலில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் குழுவினருடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் திரு.பாலச்சந்திரன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.தட்சிணாமூர்த்தி, அய்யம்பாளையம் பேரூராட்சி தலைவர் திருமதி ரேகா ஐயப்பன், அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் திருமதி ஜோதி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.