Close

TN Legislative Assembly – Public Undertaking Committee Inspection-Kodaikanal

Publish Date : 22/06/2022
.

செ.வெ.எண்:-21/2022

நாள்:21.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர். இராஜா அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் கொடைக்கானல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு(2021-2023) மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர். இராஜா அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள இன்று(21.06.2022) வருகை தந்துள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர். இராஜா அவர்கள்(திமுக) தலைமையில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.அரவிந்த் ரமேஷ்(திமுக), ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம்(திமுக), பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கிருஷ்ணசாமி(திமுக), மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி(திமுக), மதுரை வழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.தளபதி(திமுக), கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பி.நாகைமாலி(இ.கம்யூ.மா), திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி(விசிக), நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரூபி.ஆர்.மனோகரன்(இதேகா) ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள்;, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு சிறப்பு பணி அலுவலர் திரு.எம்.எல்.கே.ராஜா, துணைச் செயலாளர் திரு.மு.கருணாகரன், குழு அலுவலர் திரு.பா.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் குழுவினர் இன்று(21.06.2022) கொடைக்கானலில் கூடினர். கோடைக்கானல் நகராட்சி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள மருந்து வழங்குதல் பிரிவு, தாய்சேய் நலப்பிரிவு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். இந்த மருத்துவமனைக்கு ஒரு மாதத்திற்கு சராசரியாக எத்தனை நோயாளிகள் வந்து செல்கின்றனர், அவர்களுக்கு எவ்வளவு மருந்துகள் வழங்கப்படுகிறது, மாதந்தோறும் எவ்வளவு மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது, போதுமான அளவு மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறதா என்பது குறித்து குழுவினர் கேட்டறிந்தனர். மருந்து வழங்கும் இடத்தில் நோயாளிகளுக்கு உடனுக்குடன் மருந்துகள் வழங்கி அதிக நேரம் காத்திருக்கவிடாமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, கொடைக்கானல் நகராட்சி நட்சத்திர ஏரி பகுதியில் கொடைக்கானல் நகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் இடத்தில் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்திருப்பதை கண்டு, அவற்றை அகற்றி சுத்தமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். பின்னர், இந்துஸ்தான் யுனி லீவர் நிறுவனத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி பாதரசம் கழிவுகள் அகற்றும் பணி நடைபெறுவதை ஆய்வு மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆதிதிராவிடர் நலத்துறை பெண்கள் விடுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர். இராஜா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு(2021-2023) திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு தினமும் 350 நபர்கள் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவர்களுக்குத் தேவையான மருந்துவ வசதிகள், வழங்கப்படும் மருந்துகள், ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளின் அளவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்குள்ள பல் மருத்துவப் பிரிவிற்கு புதிய நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்குள்ள ஏரியில் 8 மாதங்களுக்கு தண்ணீர் ஓட்டம் உள்ளது. அதன்பின்னர் 4 மாதங்களுக்குத்தான் தண்ணீர் தேக்கம் அடைகிறது. சுற்றுப்புறச் சூழல் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள இந்துஸ்தான் யுனி லீவர் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி, இந்த நிறுவனத்தில் 2001 முதல் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அங்குள்ள பாதரச கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப்பணிக்காக 415 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக ஒரு மரத்திற்கு 10 மரக்கன்றுகள் என்ற வகையில் 4150 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் 715 மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். மீதியுள்ள மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள ஆதிதிராவிடர் நல பெண்கள் விடுதி 1996-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இங்கு பொதுமக்கள், பயனாளிகள் பங்களிப்புடன் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தாட்கோ கடனுதவி பெற்ற பயனாளிகள் மற்றும் அவர்கள் கடனுதவியை பயன்படுத்தும் விதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தாட்கோ கடனுதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடனுதவி பெற வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க ஆலோசகர்களை நியமித்து பழங்குடியினர் கடன்பெற வழிவகை செய்துள்ளது. தாட்கோ மற்றும் வங்கிக் கடனுதவிகள் தொடர்பாக 8428420666 என்ற கட்டணமில்லா அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்குழுவினர் நாளை(22.06.2022) திண்டுக்கல் பகுதியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். பின்னர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திண்டுக்கல் மாவட்டம் தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முனைவர் ச.முருகேசன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.மணிமாறன், உதவிப்பொறியாளர் திருமதி உதயா, இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.அன்புச்செல்வன், துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.அனிதா, தாட்கோ பொதுமேலாளர் திரு.தாமரைமணாளன், கொடைக்கானல் அரசு மருத்துவனை தலைமை மருத்துவ அலுவலர் மரு.பொன்ரதி, கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.அ.முத்துராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.