TNLA-Public Undertaking Committee Inspection- Dindigul

செ.வெ.எண்:-37/2025
நாள்:-12.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையிலான குழுவினர் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு(2024-2026), மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(12.06.2025) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் திரு.உடுமலை கே.இராதாகிருஷ்ணன், திரு.கடம்பூர் ராஜூ, திரு.மு.பெ.கிரி, திரு.ஆ.கோவிந்தசாமி, திரு.வி.பி.நாகைமாலி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், திரு.த.வேலு ஆகியோர் கொண்ட குழுவினர் 2 நாட்கள் ஆய்வுப்பயணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் இன்று(12.06.2025) பழனி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் விடுதி, பழனி தாராபுரம் சாலையில் உள்ள பழனி துணை மின் நிலையத்தில் புதிய மின் தொடர் அமைத்தல் பணிகள், தோட்டனூத்து கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் திண்டுக்கல் மண்டலம் வட்ட செயல்முறை கிடங்கி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தெரிவித்ததாவது:-
பொது நிறுவனங்கள் குழுவானது இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய வந்துள்ளது. பழனியில் உள்ள தாட்கோ மூலம் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் விடுதி கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. பணிகளை விரைவில் முடித்து இந்த ஆண்டு மாணவர்களுக்கு பயன்பெறக்கூடிய வகையில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் திறந்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பழனி தாராபுரம் சாலையில் உள்ள பழனி துணை மின் நிலையத்தில் புதிய மின் தொடர் அமைத்தல் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, மின்சார கம்பங்கள் பழுதான காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பழுதுகளை சீரமைக்க மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பழுதுகள் அனைத்தும் படிப்படியாக சரி செய்யப்படும், என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி உட்பட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.