Close

TNLA-Public Undertaking Committee Meeting – Dindigul

Publish Date : 13/06/2025
.

செ.வெ.எண்:-39/2025

நாள்:-12.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர், திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு(2024-2026), மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம் தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்து, துறை அலுவலர்களுடன் இன்று(12.06.2025) ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் திரு.உடுமலை கே.இராதாகிருஷ்ணன், திரு.கடம்பூர் ராஜூ, திரு.மு.பெ.கிரி, திரு.ஆ.கோவிந்தசாமி, திரு.வி.பி.நாகைமாலி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், திரு.த.வேலு மற்றும் முதன்மை செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்திற்கு பின்னர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(12.06.2025) ஆய்வு மேற்கொண்டது. பழனி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் விடுதி, பழனி தாராபுரம் சாலையில் உள்ள பழனி துணை மின் நிலையத்தில் புதிய மின் தொடர் அமைத்தல் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த திட்டங்களின் பயன்கள் ஏழை, எளிய மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது அதிகாரிகளின் செயல்பாடு முக்கியமானது. இது ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய அதிகாரிகளுக்கு கிடைத்த வாய்ப்பு. அதைப்பயன்படுத்தி அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க செய்வதில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும், பணிகளை விரைந்து முடித்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக. மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடவு செய்தார். மேலும், 11 பயனாளிகளுக்கு ரூ.5.74 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட வன அலுவலர் திரு.ராஜ்குமார், இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, உதவி ஆட்சியர்(பயிற்சி) திருமதி ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.