TNRTP-Enterprise community Professional engagements
செ.வெ.எண்:-69/2021
நாள்:25.11.2021
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் 148 தொழில்சார் சமூக வல்லுநர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும் ஆத்தூர், வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர், குஜிலியம்பாறை ஆகிய 7 வட்டாரங்களைச் சார்ந்த 148 கிராம ஊராட்சிகளில் தொழில் முனைவுகளை உருவாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் துணைபுரிந்திட ஊராட்சிக்கு ஒன்று வீதம் மொத்தம் 148 தொழில்சார் சமூக வல்லுநர்கள் (ENTERPRISE COMMUNITY PROFESSIONALS) சம்மந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும் (148 ஊராட்சிகள்) அந்தந்த ஊராட்சி பகுதிகளில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். வயது 25 முதல் 45 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பொருத்தமான மகளிர் இல்லாதபட்சத்தில் சுய உதவிக்குழு குடும்பத்தைச் சார்ந்த ஆண்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். குறைந்தபட்சம் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி (Business Administration, Banking commerce, Social work, Agriculture, Food Science, Dairy சார்ந்த படிப்புகளுக்கு முன்னுரிமை மற்றும் பிற பட்டப் படிப்புகள்) பெற்றிருக்க வேண்டும். ஆண்ட்ராய்டுஃஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும் மற்றும் இயக்க தெரிந்திருக்க வேண்டும். வாழ்வாதாரம் மற்றும் தொழில் முனைவு தொடர்புடைய செயல்பாடுகளில் நல்ல முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தேர்வு செய்த பின் சமுதாய அமைப்புகளில் (VPRC, PLF) உள்ள பொறுப்பாளர் பதவிகளில் இல்லாதிருத்தல் வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளில் இல்லாதிருத்தல் வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண் மற்றும் தகுதியின் அடிப்படையில் தொழில்சார் சமூக வல்லுநர்கள் நியமனம் செய்யப்படுவர். மாத மதிப்பூதியம் அதிகபட்சம் ரூ.5,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களில் 04.12.2021 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான விவரங்களுக்கு, கீழ்கண்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்(TNRTP) வட்டார அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
வ.எண் | வட்டாரத்தின் பெயர் | தொடர்பு எண் | அலுவலகம் அமைந்துள்ள இடம் |
---|---|---|---|
1. | ஆத்தூர் | 9080623454 | செம்பட்டி |
2. | வத்தலகுண்டு | 6380271818 | பழையவத்தலகுண்டு |
3. | ஒட்டன்சத்திரம் | 8807109510 | ஒட்டன்சத்திரம் |
4. | பழனி | 9384169187 | பழனி |
5. | கொடைக்கானல் | 9698487475 | கீழபெருமாள்மலை கொடைக்கானல் |
6. | வேடசந்தூர் | 8807878175 | வேடசந்தூர் |
7. | குஜிலியம்பாறை | 8072998667 | குஜிலியம்பாறை |
மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் (TNRTP) திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தை 0451 2900094 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.