Close

TNSRLM – State Level Exhibition

Publish Date : 16/12/2021

செ.வெ.எண்:44/2021

நாள்:16.12.2021

சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி/மகளிர் மேளாவில் திண்டுக்கல் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவற்கு ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2021-22ம் ஆண்டு கிறிஸ்துமஸ், புது வருடம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி / மகளிர் மேளா சென்னை வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் கலந்துகொள்ள திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் கைவினை பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்படவுள்ளதால், மேற்படி விற்பனை கண்காட்சி / மகளிர் மேளாவில் கலந்து கொண்டு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், தாங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விவரங்களுடன் ”திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம்” அலுவலகத்தை 20.12.2021-க்குள் நேரடியாக அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.