Close

Tourist Office – Notification

Publish Date : 01/11/2022

செ.வெ.எண்:-83/2022

நாள்:31.10.2022

திண்டுக்கல் மாவட்டம்

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையானது சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு படுக்கை மற்றும் காலை உணவு (Bed & Breakfast) / ஹோம்ஸ்டே நிறுவனங்கள், சாகச சுற்றுலா ஆபரேட்டர்கள் (Adventure Tour Operators), முகாம் ஆபரேட்டர்கள் (Camping Operators) மற்றும் கேரவன் டூர் ஆபரேட்டர்கள் / கேரவன் பார்க் ஆபரேட்டர்கள் (Caravan Tour Operators / Caravan Park Operators) ஆகியோர்களுக்கான அங்கீகாரம் வழங்கும் பொருட்டு வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த உலக சுற்றுலாதினம்(27.09.2022) அன்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை www.tntourismtors.com என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் மற்றும் பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.