Transit Pass – Notification
செ.வெ.எண்:-57/2025
நாள்:-16.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
குவாரிகள் வழிப்போக்கு அனுமதிகள்(Transit Pass) இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு, சட்டவிரோத கனிமக் குவாரிகள், கனிமங்களை கொண்டுசெல்லுதல், இருப்பு வைத்தல் மற்றும் கனிம வணிகர்கள் சட்டம் 2011-ன் படி வழங்கப்பட்டு வந்த வழிப்போக்கு அனுமதிகள்(Transit Pass) ஆணையர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, சென்னை அவர்களின் ந.க.எண்.5156/MM13/2025 நாள்:06.06.2025-ன் படி 09.06.2025 முதல் இணைய வழியாகவே வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மேற்படி வழிப்போக்கு அனுமதிகள்(Transit Pass) பெற மேற்படி விதிகளின்படி பதிவுச்சான்றிதழ் பெற்றவர்கள், உதவி இயக்குநர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம் திண்டுக்கல்லுக்கு வருகை தர வேண்டியதில்லையென்றும், இணையதளத்தில், மேற்படி அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.