Close

TRB Examination

Publish Date : 06/02/2024
.

செ.வெ.எண்:-10/2024

நாள்:04.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(04.02.2024) நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு-2023 மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு இன்று(04.02.2024) மொத்தம் 4 மையங்களில் நடைபெற்றது. திண்டுக்கல் புனித மேரி மேல்நிலைப்பள்ளியில் 19 தேர்வறைகளில் அனுமதிக்கப்பட்ட 366 தேர்வர்களில் 350 நபர்களும், திண்டுக்கல் எம்.எஸ்.பி சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் 19 தேர்வறைகளில் அனுமதிக்கப்பட்ட 364 தேர்வர்களில் 359 நபர்களும், திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 தேர்வறைகளில் அனுமதிக்கப்பட்ட 339 தேர்வர்களில் 330 நபர்களும், திண்டுக்கல் அண்ணாமைலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 19 தேர்வறைகளில் அனுமதிக்கப்பட்ட 366 தேர்வர்களில் 349 நபர்களும் என மொத்தம் 4 தேர்வு மையங்களில் 74 தேர்வறைகளில் அனுமதிக்கப்பட்ட 1435 தேர்வர்களில் 1388 நபர்கள் தேர்வு எழுதினர். 47 தேர்வர்கள் தேர்வு எழுதவில்லை.

தேர்வர்கள் எவ்வித சிரமமுமின்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாக காற்றோட்டமான தேர்வு அறைகள், இருக்கை வசதிகள், தடையின்றி மின் விநியோகம், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு, எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன் உட்பட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.