Close

Treasury Office New building Opening

Publish Date : 25/10/2021
.

செ.வெ.எண்:-51/2021

நாள்:25.10.2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.275.92 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட, புதிய கருவூல அலுவலகக் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(25.10.2021) திறந்து வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.275.92 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட, புதிய கருவூல அலுவலகக் கட்டடத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(25.10.2021) திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் புதிய கருவூல அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.275.92 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட, புதிய கருவூல அலுவலகக் கட்டடம் கட்டும் பணி 24.06.2020 அன்று துவங்கப்பட்டு, பணிகள் யாவும் முடிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் தரை தளத்தில் மாவட்டக் கருவூல அலுவலர், உதவி கருவூல அலுவலர், அலுவலகங்கள், ஓய்வூதியதாரர் அறைகளும், பாதுகாப்பு அறை, காவலர் அறை மற்றும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் முதல் தளத்தில் கருவூல அலுவலர், உதவி கருவூல அலுவலர், அலுவலகம், கணினி அறைகளும், கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கருவூல அலுவலகக் கட்டடம், தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் 705 சதுர மீட்டர் அளவிலும், முதல் தளம் 338 சதுர மீட்டர் அளவிலும், மொத்தம் 1043 சதுர மீட்டர் அளவிலும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் சாய்வுதள அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்திற்கு ஜெனரேட்டர் மற்றும் மின் அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கருவூலத்துறை மண்டல இணை இயக்குநர் திரு.எஸ்.ஆர்.முரளிதரன், கருவூல அலுவலர் திரு.வி.சீதாராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.கே.மாதவன், இளநிலைப் பொறியாளர் திரு.எஸ்.சரவணகுமார் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.