Close

Tree plantation-state highways

Publish Date : 14/09/2021
.

செ.வெ.எண்:-19/2021

நாள்:-12.09.2021

மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் திண்டுக்கல் கோட்ட பகுதியில் 8,000 மரக்கன்றுகள் நடும் பணியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன். இ.ஆ.ப அவர்கள்,
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் திண்டுக்கல் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 8,000 மரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன். இ.ஆ.ப அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம், சித்தரேவு பகுதியில் இன்று(12.09.2021) மரக்கன்றுகள் நடவு செய்து, தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழகத்தின் பசுமை வெளிப்பரப்பை அதிகரிக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் ஐந்து லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திட அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு முயற்சியாக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாகி முறையில் அடர்வன குறுங்காடுகள் அமைக்கப்பெற்று வருகின்றன.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் திண்டுக்கல் கோட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல், ஆத்தூர், வத்தலகுண்டு மற்றும் நத்தம் ஆகிய உதவிக் கோட்டப் பகுதிகளில் தலா 2,000 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 8,000 மரக்கன்றுகள் சாலை ஓரங்களில் நடவு செய்யப்படவுள்ளது. அதற்கான பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன். இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாநில நெடுஞ்சாலைத்துறை திண்டுக்கல் கோட்டப் பொறியாளர் திரு.எஸ்.மதன்குமார், உதவி கோட்டப் பொறியாளர்(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு-ஆத்தூர்) திரு.எஸ்.கண்ணன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.