Close

Urban Local body – Ordinary election-2022

Publish Date : 28/01/2022

செ.வெ.எண்:-45/2022

நாள்:27.01.2022

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்-2022 486 பதவியிடங்களுக்கு நேரடித்தேர்தல், 54 பதவியிடங்களுக்கு மறைமுகத்தேர்தல் நடைபெறவுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சென்னை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்-2022 நடத்தப்படவுள்ளது. அதற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான நிலையான இயக்கு செயல்முறைகளை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.

தேர்தல் அட்டவணை

1 தேர்தல் அறிவிக்கை பிரசுரித்தல் மற்றும் வேட்பு மனு பெறுதல் 28.01.2022(வெள்ளிக்கிழமை)
2 வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் 04.02.2022(வெள்ளிக்கிழமை)
3 வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல் 05.02.2022(சனிக்கிழமை)
4 வேட்பு மனுக்களை திரும்ப பெறுதல் 07.02.2022(திங்கட்கிழமை)
5 வாக்குப் பதிவு நடைபெறும் நாள் 19.02.2022(சனிக்கிழமை)
6 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் 22.02.2022(செவ்வாய்க்கிழமை)
7 தேர்தல் நடவடிக்கைகள் முடிவுபெறும் நாள் 24.02.2022(வியாழக்கிழமை)
8 தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நாள் 02.03.2022(புதன்கிழமை)
9 மறைமுகத் தேர்தல்கள் மூலம் மாநகராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரைத் தேர்தெடுப்பதற்கான கூட்ட நாள் 04.03.2022(வெள்ளிக்கிழமை)

வேட்புமனுக்கள் தாக்கல் செய்தல், வேட்புமனுக்களை ஆய்வு செய்தல், வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய நிகழ்வுகளை கண்காணிப்பு கேமரா(CCTV) மூலம் பதிவு செய்திட தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

நேரடி தேர்தல் நடைபெறவிருக்கும் பதவியிடங்கள்

நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் 486 பதவியிடங்களை நிரப்பிட நேரடித் தேர்தல் நடைபெறும். இதில்,

  • திண்டுக்கல் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் – 48
வ.எண் மண்டலம் வார்டு உறுப்பினர் எண்ணிக்கை
1 மண்டலம் – 1 12
2 மண்டலம் – 2 12
3 மண்டலம் – 3 12
4 மண்டலம் – 4

12
மொத்தம் 48
  • திண்டுக்கல் மாவட்ட 3 நகராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிடங்கள் – 75
வ.எண் நகராட்சியின் பெயர் வார்டு உறுப்பினர் எண்ணிக்கை
1 கொடைக்கானல் 24
2 ஒட்டன்சத்திரம் 18
3 பழனி 33
மொத்தம் 75
  • திண்டுக்கல் மாவட்ட 23 பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிடங்கள் – 363
வ.எண் ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் வார்டு உறுப்பினர் எண்ணிக்கை
1 அகரம் 15
2 அம்மையநாயக்கனுர் 18
3 ஆயக்குடி 18
4 அய்யலூர் 15
5 அய்யம்பாளையம் 15
6 பாலசமுத்திரம் 15
7 வத்தலக்குண்டு 18
8 சின்னாளப்பட்டி 18
9 எரியோடு 15
10 கன்னிவாடி 15
11 கீரனூர் 15
12 நத்தம் 18
13 நெய்காரப்பட்டி 15
14 நிலக்கோட்டை 15
15 பாளையம் 15
16 பண்ணைக்காடு 15
17 பட்டிவீரன்படடி 15
18 சேவுகம்பட்டி 15
19 சித்தையன்கோட்டை 18
20 ஸ்ரீராமபுரம் 15
21 தாடிக்கொம்பு 15
22 வடமதுரை 15
23 வேடசந்தூர் 15
மொத்தம் 363

மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய அனைத்து பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படையில் நடைபெறும்.

வார்டு உறுப்பினர் இடஒதுக்கீடு விபரம்:

வ.எண் நகர்ப்புற உள்ளாட்சியின் பெயர் மொத்த வார்டுகளின் எண்ணிக்கை பழங்குடியினர் (பெண்) பழங்குடியினர் (பொது) ஆதிதிராவிடர் (பெண்) ஆதிதிராவிடர் (பொது) பொது (பெண்) பொது
1 மாநகராட்சி 48 0 0 2 2 22 22
2 நகராட்சிகள் 75 0 0 8 6 30 31
3 பேரூராட்சிகள் 363 2 0 46 34 142 139
மொத்தம் 486 2 0 56 42 194 192

கோவிட்-19 பெருந்தொற்று நடவடிக்கை:

கோவிட் -19 பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தவறாமல் நடவடிக்கைகள் மேற்கொள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட அளவில் மேற்கொண்ட பணிகளை கண்காணித்திட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகள்:

  • கோவிட் -19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குச்சாவடி ஒன்றுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அதிகப்பட்ச வாக்காளர்கள் எண்ணிக்கை 1200 ஆகும்.

  • திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகள் 747 ஆகும். (ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகள்-165, பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகள் – 165 மற்றும் அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகள் – 417)

  • திண்டுக்கல் மாநகராட்சியின் மொத்த வாக்குச்சாவடிகள் – 183 ஆகும். (ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகள்-47, பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகள் – 47 மற்றும் அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகள் – 89)

  • கொடைக்கானல் நகராட்சியின் மொத்த வாக்குச்சாவடிகள் -38 ஆகும். (ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகள்-14, பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகள் – 14 மற்றும் அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகள் – 10)

  • ஒட்டன்சத்திரம் நகராட்சியின் மொத்த வாக்குச்சாவடிகள் -34 ஆகும். (ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகள்-16, பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகள் – 16 மற்றும் அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகள் – 2)

  • பழனி நகராட்சியின் மொத்த வாக்குச்சாவடிகள் – 71 ஆகும். (ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகள்-32, பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகள் – 32 மற்றும் அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகள் – 7)

  • 23 பேரூராட்சிகளில் மொத்த வாக்குச்சாவடிகள் – 421 ஆகும். (ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகள்-56, பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகள் – 56 மற்றும் அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகள் – 309)

மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்

மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம், சக்கர நாற்காலி மற்றும், துணையாள் ஆகிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் (6,12,880)

01.11.2021-ம் தேதியின் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களை (Database) கொண்டு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் தயாரித்து 09.12.2021 அன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

  • இத்தேர்தலில் 2,96,745 ஆண் வாக்காளர்களும், 3,16,060 பெண் வாக்காளர்களும், 75 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 6,12,880 வாக்காளர்கள் உள்ளனர்.

  • இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் 88112 ஆண் வாக்காளர்களும், 93524 பெண் வாக்காளர்களும், 34 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆகமொத்தம் 181670 வாக்காளர்கள் உள்ளனர்.

  • 3 நகராட்சிகளில் கொடைக்கானல் நகராட்சியில் 14219 ஆண் வாக்காளர்களும், 15162 பெண் வாக்காளர்களும் 2 மூன்றாம் பாலின வாக்காளர்களும், ஒட்டனச்த்திரம் நகராட்சியில் 13641 ஆண் வாக்காளர்களும் 57640 ஆண் வாக்காளர்களும், 62006 பெண் வாக்காளர்களும், 19 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆகமொத்தம் 119665 வாக்காளர்கள் உள்ளனர்.

  • 23 பேரூராட்சிகளில் 150993 ஆண் வாக்காளர்களும், 160530 பெண் வாக்காளர்களும், 22 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆகமொத்தம் 311545 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் விபரம்

  • நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 27 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 60 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

  • நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஒரு வாக்குச்சாவடி ஒன்றுக்கு 4 அலுவலர்கள் வீதம் சுமார் 3600 அலுவலர்கள் வாக்குப்பதிவுப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

  • தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மாவட்ட முழுவதும் சுமார் 1871 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் :-

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநராட்சி, நகராட்சிகள் மற்றும், பேரூராட்சிகளில் உள்ள பதவியிடங்களுக்கான தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்காக பாரத மின்னணு நிறுவனத்தினரால் சுமார் 1500 கட்டுப்பாட்டுக் கருவிகள் (Control Unit), 3000 வாக்குப்பதிவு கருவிகள் (Ballot Unit) முதல் நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

வட்டார பார்வையாளர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் துணை இயக்குநர்/உதவி இயக்குநர் பதவி நிலையில் 30 வட்டார பார்வையாளர்கள் நியமனம் (Book Observer) செய்யப்பட்டுள்ளனர்.

பொது

  • வேட்பாளர்களின் கல்வித் தகுதி, சொத்து விபரம் மற்றும் குற்றவியல் விபரங்களை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வேட்பு மனுவுடன் ரூ.20/-க்கான முத்திரைத்தாளில் ஆணை உறுதி ஆவணம் (Affidavit) வேட்பாளர்களால் படிவம் 3-யு-ல் தாக்கல் செய்ய வேண்டும். வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் சாற்றுரை (Declaration) அளித்தால் போதுமானது.

  • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் படிவம் “A” மற்றும் படிவம் “B” ஆகியவற்றைப் பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்/உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு திரும்பப்பெறும் நாளன்று பிற்பகல் 3.00 மணிக்கு முன்னதாகச் சேர்ப்பிக்க வேண்டும். காலம் கடந்து படிவங்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் சுயேட்சை வேட்பாளராக மட்டுமே கருதப்படுவார்.

  • பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வைப்புத் தொகை (Deposits)

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் பின்வருமாறு வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.

வேட்பாளர் வைப்புத் தொகை (இதரர்கள்)

ரூ.
பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் 1000/-
நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் 2000/-
மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் 4000/-

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள்

ரூ.
பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் 500/-
நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் 1000/-
மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் 2000/-

தேர்தல் செலவினங்கள்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 தினங்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவினக் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்ய தவறுபவர்கள் மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இயலாதவாறு மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

பதவியிடம் அதிகபட்ச செலவினம் ரூ.
பேரூராட்சி வார்டு உறுப்பினர் ரூ.17,000/-
நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்
(முதல் மற்றும் இரண்டாம் நிலை)
ரூ.34,000/-
நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்
(தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை)
ரூ.85,000/-
மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ரூ.85,000/-

பாதுகாப்பு ஏற்பாடுகள்

  • மக்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாகவும், வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்திடவும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • பதட்டம் நிறைந்த வாக்குச்சாடிகள் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் பரிந்துரை பட்டியலின்படி அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படுவதோடு, வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிவக்கைகளை கண்காணிப்பு கேமரா (சிசிடிவி கேமரா)/ நுண்பார்வையாளர் (Micro Observer)/இணையதள கண்காணிப்பு (Web Streaming) ஆகியவற்றின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.

  • வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு உள்ளேயும், வெளியேயும், வாக்கு எண்ணுகை மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை முழுவதுமாக கண்காணிப்பு கேமரா (சிசிடிவி கேமரா) மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.

  • மேலும், தேர்தல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் (கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800-425-0752) கொண்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணுகை

  • சாதாரண நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 23 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணுகை மையம் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

மறைமுக தேர்தல்கள்

  • சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிhதிநிதிகளைக் கொண்டு பின்வரும் பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல்கள் 04.03.2022(வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும்.
மறைமுகத் தேர்தலுக்கான பதவியிடங்கள் பதவியிடங்களின் எண்ணிக்கை
மாநகராட்சி மன்ற மேயர் பதவியிடங்கள் 1
மாநகராட்சி மன்ற துணை மேயர் பதவியிடங்கள் 1
நகராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள் 3
நகராட்சி மன்ற துணைத்தலைவர் பதவியிடங்கள் 3
பேரூராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள் 23
நகராட்சி மன்ற துணைத்தலைவர் பதவியிடங்கள் 23
மொத்தம் 54

தேர்தல் நடத்தை விதிகள்

தேர்தல் நடத்தை விதிகள் பொறுத்தமட்டில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகள் அமைந்துள்ள எல்லை மற்றும் 5 கி.மீ சுற்றளவுக்கு தேர்தல் நடத்தை விதிகள் உடன் அமுலுக்கு வருகின்றன. எனவே, அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் நடைபெற எல்லா விதத்திலும் மாவட்ட மையத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.