Close

V.O.C Decorated Car Exhibition

Publish Date : 16/05/2022
.

செ.வெ.எண்:-21/2022

நாள்: 13.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்து நாளினை சிறப்பிக்கும் வகையில் அன்னாரது வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தினை கல்லூரி மாணவ ஃ மாணவியர்கள் பார்வையிடும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(13.05.2022) துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த விழாவினை சிறப்பிக்கும் வகையில் அன்னாரின் வாழ்க்கை வரலாற்றினை பள்ளி ஃ கல்லூரி மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் குளிரூட்டப்பட்ட அரசு பேருந்தில் நகரும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் செல்லும் வகையில் 01.11.2021 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ / மாணவியர்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்து கொள்ளும் வகையில், இந்த நகரும் புகைப்பட கண்காட்சி இன்று எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் துவங்கப்பட்டு, தொடர்ந்து கரூர் சாலையில் அமைந்துள்ள ஜி.டி.என் கல்லூரியில் இன்று காட்சிப்படுத்தப்படும். 16.05.2022 அன்று நிலக்கோட்டை அரசு கலைக்கல்லூரி, வத்தலக்குண்டு பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரியிலும், 17.05.2022 அன்று பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரியிலும், 18.05.2022 அன்று வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ சாய் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என 4 நாட்களுக்கு 8 கல்லூரிகளில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் சுதந்திர போராட்டம் குறித்து எளிய முறையில் விளக்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இப்புகைபட கண்காட்சியில், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் லட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ரமேஷ்பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திரு.அ.இளையேந்திரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.