Close

Vadamadurai Union Building

Publish Date : 15/07/2021
.

செ.வெ.எண்:-22/2020

நாள்:- 15.07.2021

திண்டுக்கல் மாவட்டம்

வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.காந்திராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.காந்திராஜன் ஆகியோர் இன்று(15.07.2021) தொடங்கி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் 1964-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு 15 கிராம ஊராட்சிகள் உள்ளன.

தமிழக அரசு அலுவலகங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பழமையான வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு பதிலாக ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.

புதிய அலுவலக கட்டிடத்தில் அலுவலர்கள், பொதுமக்கள் எளிதில் வந்து செல்வதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்ஃகூடுதல் ஆட்சியர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., வடமதுரை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.இரவீந்திரன் மற்றும் திருமதி குணவதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.