Vallalar Festival – Kodaikkanal

செ.வெ.எண்:-34/2023
நாள்: 23.04.2023
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் வள்ளலார் -200 முப்பெரும் விழா இன்று 23.04.2023 நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகம் பாவையர் அரங்கில் வள்ளலார்-200 முப்பெரும் விழா இன்று (23.04.2023) நடைபெற்றது.
இவ்விழாவில் வள்ளலார்-200 அருள்நெறி பரப்புரை சமரச சுத்த சன்மார்க்க ஆராய்ச்சி குறித்தும், திருவருட்பா பல்சுவை நிகழ்ச்சிகள் குறித்தும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
மேலும், வள்ளலார் அருட்பெரும் ஜோதி அருள்நெறிப் பரப்புரைப் பேரணி கொடைக்கானல் ஏரியிலிருந்து, பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. வள்ளலார்-200 விழாவினையொட்டி, அருட்பெருஞ்ஜோதி ஞான தீபம் பொருத்துதல், சமரச சுத்த சன்மார்க்கக் கொடி கட்டுதல், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், திருவருட்பா இன்னசையமுது, வள்ளலார் 200 அருள்நெறிப் பரப்புரை பேரணி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பள்ளி, கல்லூரி அளவில் பேச்சு போட்டி, கட்டூரை போட்டி, இசை போட்டி, ஒப்பிவித்தல் போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருமதி பா.பாரதி அவர்கள் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு டாக்டர் அருள்.நாகலிங்கம் அவர்கள், சன்மார்க்கச் செம்மல் திரு.மெய்.அருள் நந்தி சிவன் அவர்கள், விழுப்புரம் திரு அருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை நிருவாக அறங்காவலர் திரு.தமிழ்வேங்கை அவர்கள், கொடைக்கானல், பழனி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அருள்நெறி சன்மார்க்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.