Varathamanathi Dam Water Release

செ.வெ.எண்:-41/2021
நாள்:21.10.2021
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், சுமார் 5,523.18 ஏக்கர் விவசாய நிலம் பாசனத்திற்காக வரதமாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் ஆணைக்கிணங்க, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், சுமார் 5,523.18 ஏக்கர் விவசாய நிலம் பாசனத்திற்காக, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வரதமாநதி அணையில் இருந்து இன்று(21.10.2021) தண்ணீரை திறந்து வைத்து, தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பருவத்தே பயிர் செய் என்பதற்கிணங்க, விவசாயிகள் குறிப்பிட்ட காலத்தில் சாகுபடி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வரதமாநதி அணையிலிருந்து நேரடி பாசன நிலங்களுக்கும் மற்றும் மறைமுக பாசனமான 18 குளங்களில் பாசன பரப்புகளுக்கும் மொத்தம் 5,523.18 ஏக்கர் நிலங்களுக்கு நேரடி கால்வாயின் மூலம் 133 நாட்களில் 115 நாட்களுக்கு வினாடிக்கு 25 கன அடி வீதம், 248.40 மில்லியன் கன அடி தண்ணீரும், குளங்களுக்கு முதல் நிரப்பிற்கு 14 நாட்களுக்கு வினாடிக்கு 225 கன அடி வீதம், 272.00 மில்லியன் கன அடி தண்ணீரும், இரண்டாவது நிரப்பிற்கு 12 நாட்களுக்கு வினாடிக்கு 150 கன அடி வீதம், 155.52 மில்லியன் கன அடி தண்ணீரும், நீர் நிரப்பும் வகையில் 21.10.2021 முதல் 03.03.2022 வரை 687.92 மில்லியன் கன அடிக்கு மிகாமல், நீர் வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து, தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி, வரதமாநதி அணையில் இருந்து இன்று பாகனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வரதமாநதி அணையிலிருந்து, பாப்பன் கால்வாய், பெரிய வாய்க்கால், பழனி வாய்க்கால் மற்றும் 18 வாசன குளங்களில் பாசனத்திற்காக 21.10.2021 முதல் 03.03.2022 வரை 115 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், மேற்குஆயக்குடி, கிழக்குஆயக்குடி, பழனி, கோதைமங்கலம், தட்டான்குளம் ஆகிய கிராமங்களிலுள்ள 5,523.18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
வரதமாநதி அணையின் மொத்த கொள்ளளவு 110.90 மில்லியன் கனஅடி, இன்றைய நிலவரப்படி கொள்ளளவு 110.90 மி.கனஅடி. அணையின் மொத்தஉயரம் 66.47 அடி. இன்றைய நிலவரப்படி அணையில் நீர்மட்டம் 66.47 அடி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 89 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 25 கன அடியாகவும் உள்ளது. விவசாயிகள் அனைவரும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆர்.ஆனந்தி, பழனி நங்காஞ்சியாறு வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் திரு.கு.கோபி, பழனி வரதமாநதி அணைப்பிரிவு உதவிப் பொறியாளர் திரு.க.கண்ணன், உதவிப் பொறியாளர்கள் திரு.ப.ராஜசேகர், திரு.பாலு, பழனி ஊராட்சி ஒன்றியத் தலைவர் திருமதி ஈஸ்வரி கருப்பசாமி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் திரு.ஆர்.பரமசிவம், திரு.ராம்ராஜ் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.