Close

Vehicle Sound pollution

Publish Date : 06/11/2023
.

செ.வெ.எண்:-05/2023

நாள்:-02.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தால் அபராதம் விதிக்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்கவும், சாலையில் உயிரிழப்புகளை தடுக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்கள். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் ஆகியோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்துகளில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அதிக ஒலி எழுப்பிச் சென்ற பேருந்துகளை சொதனை செய்து, பெருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் வாகனங்களில் கண் கூசும் முகப்பு விளக்குகள், பல் வண்ண ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வ செய்து அவைகளும் நீக்கப்பட்டன. தொடர்ந்து சோதனை செய்து விதி மீறல்கள் இருப்பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.