Close

Village Assistant Recruitment- Athoor Taluk

Publish Date : 02/08/2022

செ.வெ.எண்:-05/2022

நாள்:01.08.2022

திண்டுக்கல் மாவட்டம்

ஆத்தூர் வட்டத்தில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் 2021-ம் ஆண்டு காலியாக உள்ள 4 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு பின்வரும் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த தகுதிகளை கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை 17.08.2022-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் ஆத்தூர் வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

விண்ணப்பிக்க தகுதிகள்:-

1.கல்வித் தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.வயது 01.07.2022 அன்று அனைத்து வகுப்பினர்களும் குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 32 ஆண்டுகள், இதர வகுப்பினருக்கு அதிகபட்சம் 37 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

3.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

காலியிடகிராமங்கள் விவரம்

1.வீரக்கல் – SC (பெண்கள் ஆதரவற்ற விதவைக்காக ஓதுக்கப்பட்டது) முன்னுரிமையற்றவர்

2.வக்கம்பட்டி – SC ( பெண்கள் ஆதரவற்றவிதவைக்காக ஓதுக்கப்பட்டது ) முன்னுரிமையற்றவர்

3.பாளையங்கோட்டை – MBC/DNC (பொது) முன்னுரிமையற்றவர்

4.பாறைப்பட்டி – BC (பிற்பட்டவகுப்பினர் முஸ்லீம் நீங்கலாக) (பொது) முன்னுரிமையற்றவர்

பணியிடம் காலியாக உள்ள கிராமம், கி.மீ.சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும், இல்லாத நிலையில் குறுவட்ட அளவிலும், குறுவட்ட அளவிலும் தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள ஆத்தூர் வட்டத்தைச் சேர்ந்த வட்ட அளவில் மட்டுமே தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு ஆத்தூர் வட்டாட்சியர் திரு.சு.சரவணன் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.